நான் அடிச்ச பத்து பேருமே DON தான்-  நாட்டு நாட்டு பாடல் எந்தெந்த பிரம்மாண்ட படங்களுடன் போட்டி போட்டது தெரியுமா?

by Arun Prasad |
RRR
X

RRR

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

RRR

RRR

மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தென்னிந்தியா மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே “ஆர்ஆர்ஆர்” அலை வீசியது. இதனை தொடர்ந்து அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இத்திரைப்படம் சக்கை போடு போட்டது. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் மட்டுமன்றி அமெரிக்கர்களையும் இத்திரைப்படம் வசீகரித்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல வெளிநாட்டினர் இப்பாடலில் கதாநாயகர்கள் ஆடும் நடனத்தை சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர். இவ்வாறு உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக இப்பாடல் அறியப்பட்டது.

RRR

RRR

இந்த நிலையில் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்றது. இதில் “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. வரலாற்றில் முதன்முதலாக ஒரு இந்திய திரைப்படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்திருப்பதை சினிமா ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த பாடல் எந்தெந்த உலக திரைப்படங்களின் பாடல்களோடு போட்டிப்போட்டது என்பதை குறித்து பார்க்கலாம்.

ஆஸ்கர் பட்டியலில் ஒரிஜினல் பாடல் என்ற கேட்டகிரியில் மொத்தம் 5 பாடல்கள் நாமினேஷனில் நுழைந்தது. அதில் உலக சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான “Everything Everywhere All At Once” திரைப்படத்தில் இடம்பெற்ற “This Is A Life” என்ற பாடல் இந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படத்திற்கு மொத்தம் 7 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.

M.M.Keeravani

M.M.Keeravani

அதே போல் “Black Panther:Wakanda Forever” என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் இடம்பெற்ற “Lift Me Up” என்ற பாடலும் இந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிகை அலங்காரம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருது வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் “Top Gun: Maverick” என்ற மிகப் புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற “Hold My Hand” என்ற பாடலும் இடம்பெற்றிருந்தது. இப்பாடலை உலகப் புகழ் பெற்ற பாடகியான லேடி காகா பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மிகப் பெரிய ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளித்தான் “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கரை வென்றுள்ளது. இதன்மூலம் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளராக கவனம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய சினிமாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய இரண்டு படைப்புகள்… ஆஸ்கர் முழு லிஸ்ட் இதோ…

Next Story