More
Categories: Cinema News latest news

தியேட்டரில் 50 சதவீத அனுமதி…ரிலீஸ் ஆகுமா ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்?…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே கடந்த 2 வருடங்களாகவே திரையரங்குகள் சரியாக செயல்படவில்லை. பல மாதங்கள் மூடிக்கிடந்தது. இடையிடையே 3 மாதங்கள் மட்டும் திறக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் ஊரடங்கு என மூடப்பட்டது. அப்படியே திறந்தாலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களாக மட்டுமே 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, டாக்டர் மற்றும் மாநாடு படங்கள் நல்ல வசூலை பெற்றது. 2 படங்களும் தலா ரூ.100 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. எனவே, திரையுலகினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

இதற்கு எமனாக தற்போது கொரோனா வைரஸ் வந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் எண்ணிக்கை கூடி வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் 10 நாட்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், தியேட்டர்களுக்கு 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பதும் இடம்பெற்றுள்ளது.

RRR movie

இதில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் சிக்கியுள்ளது. பாகுபலிக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக முதல் 3 நாட்கள்தான் அதிக வசூலை திரைப்படங்கள் வசூலிக்கும். பெரிய நடிகர்களின் படங்கள் முதல் 3 நாட்கள் படத்தின் பட்ஜெட்டை வசூலித்துவிடும். அதன்பின் வசூல் குறையும்.

7ம் தேதி முதல் 10ம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்கிற நிலையில் இது ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூலை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆந்திரா, மும்பை, கர்நாடகா என அனைத்து மாநிலங்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, திட்டமிட்டபடி இப்படம் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 7ம் தேதி வெளியாகுமா என்பது தெரியவில்லை.

ஆந்திராவில் ஏற்கனவே டிக்கெட் விலை குறைப்பால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா

Recent Posts