ஆஸ்கர் வாங்குறதுக்கு இவ்வளவு கோடிதான் செல்வழிச்சோம்-உண்மையை பகீரங்கமாக ஒப்புக்கொண்ட RRR படக்குழுவினர்…
ராஜமௌலி இயக்கத்தில் உருவான “RRR” திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இத்திரைப்படம் மிகப்பிரம்மாண்ட செலவில் உருவாகி, உலகளவில் கிட்டத்தட்ட 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அமெரிக்கர்கள் கொண்டாடிய RRR
இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசித்து ரசித்து பார்த்தார்கள். குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இத்திரைப்படத்தை விரும்பி பார்த்தார்கள். அவர்கள் மட்டுமல்லாது அமெரிக்கர்களும் இத்திரைப்படத்தை கொண்டாடினர்.
ஆஸ்கர் விருது
“RRR” திரைப்படம் சர்வதேச அளவில் 28க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளது. இதில் மிக முக்கியமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற 95 அவது ஆஸ்கர் விழாவில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த சாதனையை இந்தியர்கள் பலரும் கொண்டாடினர்.
“நாட்டு நாட்டு” பாடல் உலகளவில் மிகவும் டிரெண்டான பாடலாகும். இந்த பாடலில் ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் போட்டி போட்டி ஆடியிருந்தார்கள். இவர்களின் நடனம் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. சமூக வலைத்தங்களில் பலரும் அவர்களை போல் நடனமாடி ரீல்ஸ் செய்து வந்தனர்.
இத்தனை கோடி செலவானது
இதனை தொடர்ந்து “RRR” திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வாங்குவதற்கு ரூ.80 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. இது பேசுப்பொருளான நிலையில் சமீபத்தில் ராஜமௌலியின் மகனான கார்த்திகேயா, “இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் வாங்குவதற்கு 8.5 கோடியே செலவானது” என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினாராம். “RRR” திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கார்த்திகேயா என்பது குறிப்பிடத்தக்கது.