Categories: Entertainment News latest news

ஆர்.ஆர்.ஆர் ரிலீசாகும் போது இப்படிதான் இருப்பாங்க போல…வைரல் மீம்ஸ்….

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள இரத்தம் ரணம் ரெளத்திரம் ( ஆர்.ஆர்.ஆர் ) திரைப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

RRR movie

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராக உள்ள இத்திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்த நிலையில் ஊரடங்கு, கொரோனா பரவல் என தள்ளி சென்றது.

Also Read

இருந்தாலும் , ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலிருந்து பாடல் காட்சிகளும், திரைப்படத்தின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. தொடர்ந்து, ஜனவரி  7 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே , சமூக வலைதளலங்களில் ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ் ஆகும் போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் வயசே ஆகிடும் என்பதை குறிக்கும் வகையில் நெட்டிசன்கள் இருவரின் புகைப்படத்தையும் வயதானவர்கள் போல எடிட் செய்து மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

Published by
sam