பாகுபலிய விட பத்து மடங்கு!.. ஆர்.ஆர்.ஆர். பட டிவிட்டர் விமர்சனம்....

by சிவா |   ( Updated:2022-03-26 21:55:51  )
twitter
X

தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி மற்றும் பாகுபலி2 வுக்கு பின் அவர் இயக்கியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

rrr

இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். பாகுபலி படம் போலவே இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

rrr

இந்த திரைப்படம் இன்று காலை உலகம் முழுவதும் வெளியானது. நேற்று சில தியேட்டர்களில் மட்டும் 2 பிரீமியர் காட்சிகள் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த பலரும் இப்படம் பற்றிய எண்ணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

twitter

படம் சிறப்பாக இருப்பதாகவும் தேசப்பற்று மட்டுமில்லாமல் அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகளும் மனதை கவர்வதாகவும், பாகுபலி2-வை விட இப்படம் 10 மடங்கு சிறப்பாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். கண்டிப்பாக ராஜமவுலிக்கு இது மற்றொரு பிளாக்பஸ்டர் திரைப்படம் எனவும், இப்படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

twitter

ஹிந்தி மொழி ரசிகர்களிடமும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விமர்சித்துள்ள விமர்சகர்கள் எல்லோருமே 5 ஸ்டார்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

twitter

Next Story