
Cinema News
கடவுளையே நாங்க ஏமாத்த போறோம்.! இந்த செய்கை எங்க போய் நிக்கப்போகுதுனு தெரியலையே.!?
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் RRR. இந்த திரைப்படத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் , சமுத்திரகனி என பிரமாண்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளன.
இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. அதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் மூன்று மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு தற்போது அடுத்த வாரம் அதாவது மார்ச் 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
தற்போது அந்த தேதியை கவனித்த படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாம். அதாவது அன்றைய தேதி நல்லநாள் இல்லையாம். இதனால் தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது ஒரு விபரீத முடிவை படக்குழு எடுத்துள்ளது.
ஆம், ரிலீஸ் தேதி 25 தான். ஆனால் ஒருநாள் முன்னதாக படம் பார்க்க விரும்புபவர்கள் பிரீமியம் டிக்கெட் எனப்படும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். இது 24ஆம் தேதி திரையிடப்படும் சிறப்பு காட்சிக்கான டிக்கெட். அப்படி வாங்கிக்கொண்டு மார்ச் 24ம் தேதி படத்தை பார்த்து விடலாம் என கூறியுள்ளதாம் படக்குழு.
இதையும் படியுங்களேன் – வலிமைக்கு வந்த காரசார விமர்சனங்கள்.! அத செய்ய சொன்னதே அஜித் தான் சார்.!
இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சிறப்பு காட்சிகளை பார்ப்பவர்கள் பார்த்தால் கண்டிப்பாக படம் எப்படி இருக்கிறது என்று கருத்து சொல்வார்கள். ஒருவேளை பாசிட்டிவாக இருந்தால் நல்லது. ஒருவேளை நெகட்டிவான கமெண்ட் வந்துவிட்டால் அடுத்த முதல் நாள் கலெக்ஷன் பாதிக்கப்படும்.
ஏற்கனவே ராதே ஷியாம் எனும் தெலுங்கு படம் தமிழகத்தில் ஓடிய ஓட்டம் பலருக்கும் தெரியும். அதே நிலைமை இந்த படத்திற்கும் வந்துவிடக்கூடாது என்று அந்த சிறப்பு காட்சியை கண்டு பயந்து நிற்கிறார்கள் தமிழக தியேட்டர் உரிமையாளர்கள்.