விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸை காப்பாற்றப்போகும் ஒரே நபர் அடுத்து சிவகார்த்திகேயன் தான் என அவரது ரசிகர்கள் வெறித்தனமாக நம்பி வருகின்றனர். தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை கவர வித்தியாசமான படங்களில் பல கடுமையான உழைப்புகளை கொட்டி சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
எஸ்கே 21வது படம் விரைவில் டைட்டில் அறிவிப்புடன் சிவகார்த்திகேயன் பர்த்டே ட்ரீட்டாக வெளியாக உள்ள நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பூஜை நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: ஹீரோ இவர்தான்னு சொல்லி நடிகைக்கு ஷாக் கொடுத்த பாரதிராஜா!. பாக்கியராஜ் ஹீரோ ஆன கதை இதுதான்..
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் வளர்ந்து வருகிறார். சாதாரண ஹீரோவாக இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு நெல்சன் டாக்டர் படத்தை கொடுத்து 100 கோடி ஹீரோவாக மாற்றினார்.
தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படமும் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூல் படமாக மாறியது. ஆனால், பிரின்ஸ் படம் பெரிதாக வசூல் ஈட்டவில்லை. கடந்த ஆண்டு வெளியான மாவீரன் படம் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், 89 கோடி தான் வசூல் செய்தது. இந்த ஆண்டு வெளியான ஏலியன் படமான அயலான் படமும் 80 கோடி வசூலையே எட்டியது.
இதையும் படிங்க: என்னை தூக்கிட்டு அந்த நடிகர போட்டாங்க!.. முதல் படத்திலேயே ஏமாந்து போன தேங்காய் சீனிவாசன்!..
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள எஸ்கே 21 படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையாக ரெடியான வீடியோ நேற்று வெளியாகி வைரலானது. அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள எஸ்கே 23 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போவதாக கூறினர். அதன் பின்னர், சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர் தான் கன்ஃபார்ம் என்றனர்.
இந்நிலையில், நாளை பட பூஜை நடைபெற உள்ள நிலையில், கன்னட நடிகை ருக்மினி வசந்த் தான் நடிக்கப் போகிறார் என்கின்றனர். விஜய்சேதுபதியின் 51வது படத்திலும் இவர் தான் ஹீரோயின்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…