ரஜினிகாந்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவக்குமார். 1965 ஆம் ஆண்டே தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமாகிவிட்டார் சிவக்குமார். அதன் பிறகு பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
முக்கியமாக சிவாஜி,எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களோடும் சிவக்குமார் நடித்துள்ளார். அதில் எம்.ஜி.ஆரோடு நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சிவக்குமார்.
எம்.ஜி.ஆர் படங்களை பொறுத்தவரை அவருடன் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல விதிமுறைகள் உண்டு என கூறுகிறார் சிவக்குமார். அதாவது நல்ல பண்புகள் கொண்ட ஆட்களை மட்டுமே அவரது படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்க வைப்பாராம்.
குடி பழக்கம் போன்ற தவறான பழக்கங்கள் இருப்பவர்களை தனது படங்களில் அவர் அனுமதிக்க மாட்டார். இந்த நிலையில் இதய வீணை என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சிவக்குமார். அப்போது படக்குழுவினர் சிவக்குமாரின் உயரத்தை அளந்து பார்த்துள்ளனர்.
ஏனெனில் எம்.ஜி.ஆரை விட உயரம் அதிகமாக இருந்தால் அவரை எம்.ஜி.ஆருடன் நடிக்க விட மாட்டார்களாம். சிவக்குமார் எம்.ஜி.ஆருக்கு நிகரான உயரத்தில் இருந்தார். எனவே எம்.ஜி.ஆருடன் வரும் காட்சிகளில் காலில் செருப்புதான் போட்டுக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் எம்.ஜி.ஆர் உங்களை விட உயரமாக தெரிவார். எக்காரணம் கொண்டும் எம்.ஜி.ஆர் காட்சிகளில் ஷூ அணியக்கூடாது என படக்குழுவில் கூறியுள்ளனர். சிவக்குமாரும் அந்த மாதிரியே செருப்பை அணிந்து நடித்துள்ளார். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…