Cinema History
நீங்க நடிக்கிறது சரியில்ல… விவேக்கிற்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்.. அதுனாலதான் படம் ஹிட்!..
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் புகழ்ப்பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விவேக். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பே விவேக் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
இயக்குனர் பாலச்சந்தரின் நடிப்பு பள்ளியில் பயின்று சினிமாவிற்கு வந்தவர் என்பதால் விவேக் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் அப்போது இயக்குனர் பாலச்சந்தரிடம் நல்ல உறவில் இருந்தார். அவர் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
வெறும் நகைச்சுவை காட்சிகள் மட்டும் நடிப்போம் என இல்லாமல் அவரது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு பல கருத்துக்களை கூறுவார் விவேக். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல விஷயங்களை பேசியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் படிக்காதவன். இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கினார். இதில் மிக முக்கியமான ரவுடி கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். ஆனால் விவேக்கிற்கு முன்பே அந்த கதாபாத்திரத்தில் வடிவேலுதான் நடிக்க இருந்தார்.
இயக்குனர் போட்ட ரூல்ஸ்:
ஆனால் படத்தில் சில காட்சிகள் வடிவேலுவிற்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை. இந்த நிலையில் படத்தில் விவேக் நடிக்க துவங்கியபோது வழக்கமாக விவேக் பேசும் தோணியிலேயே பேசி கொண்டிருந்தார்.
அது சுராஜ்க்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே விவேக்கை தனியாக அழைத்த சுராஜ். சார் வழக்கமா நீங்க நடிக்கிற மாதிரி கதாபாத்திரம் இது இல்ல. இதுல கொஞ்சம் வெரப்பா இருக்கணும். நீங்க சிரிக்க கூடாது, உங்களை பார்த்து மக்கள்தான் சிரிக்கணும். அதனால் பேசும்போது கூட திமிராவே பேசுங்க” என கூறியுள்ளார்.
சரி என்று விவேக்கும் அதே மாதிரியே பேசியுள்ளார். விவேக்கின் அந்த விதமான கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் வெளியான பிறகு பலரும் படத்தின் நகைச்சுவை காட்சிகள் குறித்தே பேசிக்கொண்டிருந்ததற்கு இயக்குனரே காரணமாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜ்கிரணிடம் வடிவேலு எப்படி சான்ஸ் கேட்டார் தெரியுமா?.. இப்படியெல்லாம பண்ணுவாரு?