கங்குவா வீடியோவில் ரம்மி விளம்பரம்!.. சூர்யா அலார்ட்டா இல்லனா மறுபடியும் உயிர் போயிடும்!..

by prabhanjani |   ( Updated:2023-07-26 03:38:02  )
surya kanguva
X

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பொதுவாக பான் இந்தியா படங்கள் 5 அல்லது 6 மொழிகளில் வெளியாகும். ஆனால் இந்த கங்குவா திரைப்படம் ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

surya

சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோவில், ஆன்லைன் ரம்மிக்கான விளம்பரம் ஒளிபரப்பாகிறது. மேலும் அந்த வீடியோவின் டிஸ்கிரப்ஷனில் அந்த ஆப்பை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த வலைப்பேச்சு பிஸ்மி, அந்த விளம்பரத்தை நீக்குமாறு சூர்யா வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.surya

ஏற்கனவே சூர்யா பிறந்தநாளன்று பேனர் கட்அவுட் வைக்க முயன்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரந்தனர். இந்நிலையில், கங்குவா க்ளிம்ஸ் வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்கள், இந்த ஆன்லைன் ரம்மி விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு, அதனை டவுன்லோட் செய்து, விளையாடி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது.

kanguva

ஏற்கனவே தமிழ்நாட்டில் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். எனவே எப்போதும் சமூக பொறுப்போடு செயல்படும் சூர்யா, மீண்டும் ஒரு உயிர் போய்விடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, இந்த விளம்பரத்தை நீக்க வலியுறுத்த வேண்டும் என்று பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- எவ பேச்சக்கேட்டு என்னை தூக்குனீங்க!.. பாரதிராஜாவிடம் எகிறிய வடிவுக்கரசி.. படப்பிடிப்பி்ல் நடந்த பஞ்சாயத்து!…

Next Story