என்னது இந்த நடிகைக்கும் அந்த இசையமைப்பாளருக்கும் கல்யாணமா? என்னங்க இது புது புரளியா இருக்கு?

by ராம் சுதன் |   ( Updated:2022-05-21 13:26:24  )
anirudh
X

இதுவரை எத்தனையோ திரையுலக நட்சத்திரங்கள் குறித்த கிசுகிசுக்கள் வந்துள்ளன. அதில் சில உண்மையாக இருக்கும் சில பொய்யாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அதன்படி தமிழில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்துக்கும் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

keerthi suresh

மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் காட்டுத் தீ போல வேகமாக சோசியல் மீடியாவில் பரவி வருவதால், ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வெளியானதால், எங்கள் இருவருக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டும் தான். வேறு எந்த உறவும் கிடையாது என அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே விளக்கம் அளித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

anirudh

மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படங்கள் சமீபத்தில் அனிருத் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது.

Next Story