பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை விவாகரத்தா? இணையத்தில் பரவும் செய்திகளால் அதிர்ச்சி...!
சமீபகாலமாகவே நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் குறித்து சொல்லவே வேண்டாம். அதில் பணியாற்றும் திவ்ய தர்ஷினி அதாவது டிடி முதல் ரம்யா வரை அனைவருமே விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வந்த நடிகை ரக்ஷிதாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா.
இவர் முன்னதாக தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த ரக்ஷிதா இறுதியாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்தார். சமீபத்தில் தான் அந்த தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரக்ஷிதா மற்றும் அவரின் கணவர் தினேஷ் ஆகிய இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதாகவும், தற்சமயம் இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து இவர்களின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் இவர்கள் இருவரும் எப்போதும் போலத்தான் இருக்கிறார்கள். இது வெறும் வதந்தி தான் என கூறியிருக்கிறார்கள். இதனால் எது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.