என் பொண்ணு அவர் கூடலாம் நடிக்காதுங்க... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்
தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்களின் வரவு அதிகரித்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட துருவ் விக்ரமுடன், நடிகை ரோஜாவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து இயக்குனர் செல்வமணி முதல்முறையாக மனம் திறந்திருக்கிறார்.
கோலிவுட்டின் ஹிட் நாயகனாக இருப்பவர் விக்ரம். இவர் தனது மகனையும் சினிமாவில் நல்ல நிலைமையில் கொண்டு வர பெரிய போராட்டமே நடத்தி வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் மெகா ஹிட் படமான அர்ஜூன் ரெட்டி படத்தினை தமிழில் ரீமேக் செய்தார். இப்படத்தினை முதலில் பாலா இயக்கி இருந்தார்.
அதை பார்த்த விக்ரம் செம அப்சேட். உடனே எல்லாரையும் படத்தில் இருந்து நீக்கினார். இயக்குனர் பாலாவையும் தூக்கியடித்து விட்டு, புது குழுவுடன் படத்தினை மீண்டும் எடுத்து வெளியிட்டார். அதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதையும் படிங்க: விக்ரம் மகன் வேடத்தில் துருவ் நடிக்க மறுத்தது ஏன்? பரபரப்பு தகவல்
இந்நிலையில், தனது மகனை தெலுங்கு படத்தில் நேரடியாக களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்தது. அதுவுமில்லாமல், அவருக்கு ஜோடியாக ரோஜாவின் மகள் அன்சு மாலிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது இந்த செய்திக்கு அவர் தந்தையும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். எனது மகள் தற்போது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட்டாள். அவள் படிப்பை முடித்து வர சில வருடம் எடுக்கும். அப்போது, அவர் வந்தப்பின் நடிக்க வேண்டும் எனக் கூறினால் இதுகுறித்து யோசிப்போம். இப்போது சினிமா குறித்த எண்ணம் அவருக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அடப்போங்கப்பா!