தளபதி 68 படத்தில் விஜய்க்கு இத்தனை கோடி சம்பளமா? - அதிர்ந்துபோன தயாரிப்பாளர்கள்!..
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது “லியோ” திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இன்னும் ஐந்து மாதங்களே இருப்பதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படம் குறித்தான பேச்சுக்கள் எழுந்து வருகிறது. இத்திரைப்படத்தை முதலில் அட்லீ இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதன் பின் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லினேனி இயக்குவதாக தகவல் வந்தது. ஆனால் தற்போது இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஓரளவு உண்மைக்கு நெருக்கமான தகவல் என்று பல சினிமா பத்திரிக்கையாளர்கள் தங்களது பேட்டிகளில் கூறிவருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து வெளியான செய்தி ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது “தளபதி 68” திரைப்படத்திற்காக விஜய் 200 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. இந்த செய்தியை பார்த்த பலரும் அதிர்ச்சியில் மூழ்கினர். குறிப்பாக பல தயாரிப்பாளர்கள் இந்த செய்தியை பார்த்து அரண்டுபோனதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த தகவல் வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. விஜய் சமீப காலமாக 125 கோடிகள் சம்பளமாக வாங்கி வருவதாக சினித்துறையினர் கூறுகின்றனர். ஆனால் “தளபதி 68” திரைப்படத்திற்காக விஜய் 150 கோடிகளாக தனது சம்பளத்தை உயர்த்த உள்ளார் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு லேட்.. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் செய்த வேலை… எஸ்.வி.ரங்காராவுக்கு நேர்ந்த சங்கடம்!..