80ஸ் ரசிகர்களால் எக்காலமும் மறக்க முடியாத ரூபிணி

தமிழ் சினிமாவில் தற்போது எண்ணற்ற கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள். ஆனால் அனைவரும் நீடித்து நிலைப்பதில்லை வெறும் அழகு கவர்ச்சி மட்டுமே பிரதானமாக வைத்து கதாநாயகிக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படங்கள் தற்போது வருவதில்லை.

roobini

சில மாதங்கள் பிரபலமாக இருக்கிறார்கள் அதோடு வேறு ஒரு மாடலிங்கை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்கள் அவர் சில நாட்களுக்கு பிஸியாக இருந்து விட்டு அவரும் காணாமல் போய்விடுவார்.

80, 90களில் பல கதாநாயகிகள் தமிழ் சினிமாவை ஆண்டிருக்கிறார்கள். ஒரு ஹீரோயி சினிமாவில் அறிமுகமானால் அவர்கள் ஃபீல்ட் அவுட் ஆக ஐந்து அல்லது 6 வருடங்கள் ஆகும்.

rajini-roobini

கவர்ச்சியாகவும் நடிப்பார்கள் அதே சமயம் தனக்கு நடிப்பதற்கு நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களிலும் நடிப்பார்கள் அதனால் அவர்கள் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கிறார்கள். தற்போதுள்ள நடிகைகளில் நயன் தாராவை தவிர யாரும் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கவில்லை. ஆனால் அப்போது இருந்த காலத்தில் இருந்த நடிகைகள் தொடர்ந்து பல வருடங்கள் சினிமாவில் உடும்பு அசைக்கவே முடியாமல் நிலைத்து நின்றார்கள் அப்படி ஒரு நடிகைதான் ரூபிணி.

rupini-3

87ல் அறிமுகமாகி கிட்டத்தட்ட 94 வரை பல படங்களில் நடித்து ஸ்ட்ராங்காக தமிழ் சினிமாவை ஒரு ரவுண்ட் வந்தவர்தான் ரூபிணி. ரூபிணியின் இயற்பெயர் கோமல் மகுவாகர் என்பதாகும் 1969ம் ஆண்டு பிறந்தவர் இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக இந்தியில் மிலி என்ற படத்தில் அறிமுகமானார் ரூபிணி. நடிகையும் பாக்யராஜின் மனைவியுமான பூர்ணிமா பாக்யராஜ் பார்த்துவிட்டு ரூபிணியை தமிழில் நடிக்கக் அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

michael-madhana-kamarajan

விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படம் மூலம் ரூபிணி அறிமுகமானார். ரூபிணியை அறிமுகம் செய்தவர் ரஜினியின் தர்மதுரை, தம்பிக்கு எந்த ஊரு , மாப்பிள்ளை, கமலின் விக்ரம் , காக்கிச்சட்டை படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் ராஜசேகர் அவர்தான் ரூபிணியை விஜயகாந்த் நடிப்பில் தான் இயக்கிய கூலிக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார்.

rupini-latest

87ம் ஆண்டு ரூபிணிக்கு பொற்காலமான ஆண்டுதான் இரண்டாவது படமான நினைக்க தெரிந்த மனமே படத்தில் அப்போதைய முன்னணி ஹீரோவாக வெள்ளிவிழா நாயகனாக ஜொலித்துக்கொண்டிருந்த மோகனுக்கு ஜோடியாக நடித்தார் அந்த படம் ஆவரேஜாக ஓடிய படம்தான். இருந்தாலும் படத்தின் கதை நன்றாக இருந்தது. உருகி உருகி போட்டோ கிராஃபர் மோகனை காதலித்து விட்டு கதாசிரியர் சந்திரசேகரை சந்தர்ப்ப சூழ்நிலையால் மணம் முடிக்கும் கதை.

தான் காதலித்த மோகன் ட்ரெயினில் எதிரில் உட்கார தன் கணவர் சந்திரசேகருடன் உட்கார்ந்து மோகனின் தோற்றுப்போன காதல் கதையை கேட்டுக்கொண்டே வருவார்.

சந்திரசேகரும் ஒரு கதாசிரியர் என்பதால் மோகன் சொன்ன கதையை ரசித்து கேட்டு வருவார். தன் மனைவி ரூபிணிதான் மோகனின் காதலி என்பது சந்திரசேகருக்கு தெரியாது இறுதியில்தான் தெரிய வரும்.

3-roobini

சந்தர்ப்ப சூழ்நிலையால் மோகனை திருமணம் செய்ய முடியாமல் சந்திரசேகரை திருமணம் செய்து கொள்ளும் ரூபிணி ட்ரெயினில் கணவர் சந்திரசேகரிடம் மோகன் ரூபிணியை யாரென்றே காட்டிக்கொள்ளாமல் அழுதுகொண்டே மோகன்சொல்லும் தங்களின் காதல் கதையை கேட்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கேட்டுக்கொண்டே வருவார். நல்லதொரு முகபாவங்களை வெளிப்படுத்துவார்.

rubini-latest

முதல்பாதியில் மோகனுடன் வரும் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் ஏ 1 ஆக இருக்கும் எனலாம் அதற்கேற்றவாறு எங்கெங்கு நீ சென்ற போதும், சின்ன சின்ன முத்து நீரிலே , கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல், உள்ளிட்ட பாடல்கள் அருமையாக இளையராஜா இசையமைத்து இருந்தார்.

2-roobini-actress

இரண்டாவது படமான நினைக்க தெரிந்த மனமே ரூபிணிக்கு மிக அழுத்தமான எப்போதும் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தது எனலாம்.

அதன் பின் மோகனுடன் நடித்த தீர்த்தகரையினிலே படம் மணிவண்ணன் இயக்கி இருந்தார். மோகனின் மார்க்கெட் அவுட் ஆகிக்கொண்டிருந்த இறுதி நேரங்களில் வந்த படம் என்பதால் படம் சரியாக போகவில்லை. இப்படத்தில் இளையராஜா இசையில் வந்த கொட்டிக்கிடக்குது செல்வங்கள் பூமியிலே, விழியில் புதுகவிதை படித்தேன் போன்ற பாடல் காட்சிகளில் ரூபிணியை பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.

ஒரு நடிகை புகழ்பெற்றுவிட்டாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கதாநாயகியாக நடித்துவிடுவார்கள் என்பது அப்போதிருந்து இப்போது வரை உள்ள வரலாறு.

அப்படியாக ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான மனிதன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரூபிணி கலக்கி இருந்தார்.

தொடர்ந்து ரூபிணி புதியவானம், பிள்ளைக்காக, என்ன பெத்த ராசா என சத்யராஜ், பிரபு, ராமராஜன் என அந்நாளைய முன்னணி ஹீரோக்கள் என பலருடன் நடித்தாலும் பெரும்பாலான படங்கள் தோல்விப்படங்களாகவே இருந்தன. இருந்தாலும் ரூபிணி தனித்து தெரிந்தார் ரூபிணிக்கு பட வாய்ப்புகள் குவிந்தது அதுதான் ரூபிணி மேஜிக்.

கமலுடன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படமும், மைக்கேல் மதன காமராஜன் படமும் ரூபிணிக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலை விட்டு விட்டு ஆனந்தை ரெஜிஸ்டர் ஆபிஸில் திருமணம் முடிக்கும் காட்சிகளும், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல்களில் ஒருவருக்கு ஜோடியாக சிவராத்திரி தூக்கமேது பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டதும். 80ஸ் கிட்ஸ்களுக்கு இன்னும் அந்த ரூபிணி நினைவுகள் தேனாய் இனிக்கிறது எனலாம்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார் அந்த படத்தில் டூயட் எல்லாம் இவருக்கு இல்லை. அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.

தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகள் அனைத்திலும் ரூபிணி நடித்துள்ளார்.

நம்ம அண்ணாச்சி படத்துக்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் இல்லை. அதன் பின் இவரின் வயதும் முதிர்ச்சியடைந்து விட்டது. தற்போது ரூபிணிக்கு 51 வயதாகிறது இருந்தாலும் 80ஸ் கிட்ஸ்கள் அந்நாளைய ரூபிணியை மறக்கவில்லை எனலாம்.

rubini-old

அழகு, இளமை, கவர்ச்சி, நல்ல நடிப்பு திறன் இவை அனைத்தையுமே அழகாக வெளிப்படுத்தியதால்தான் ரூபிணி நீண்ட நாட்கள் ஃபீல்டில் நிலைத்து நிற்க முடிந்தது.

1995ம் ஆண்டு திருமணம் முடிந்த இவர் கணவர் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது தமிழ்நாடு விசிட் வரும் ரூபிணி பழைய சினிமா நபர்களை சந்திப்பார் சமீபத்தில் கூட தன்னுடைய பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story