ஹாலிவுட்டையே அதிர வைத்த தனுஷின் படம்...! படத்தை பார்த்து வாயடைத்து நின்ற ரூஸோ பிரதர்ஸ்...
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவையே பிரமிக்க வைத்தவர் நடிகர் தனுஷ். இவர் சமீபத்தில் நடித்து வெளியான ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் இவரை பெருமையின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது.
சினிமா பிரபலங்கள் மத்தியில் மிகவும் பெருமைக்குரியவராக திகழ்கிறார் நடிகர் தனுஷ். அந்த படத்திற்கு பிறகு தமிழில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம் படத்தை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தை தி கிரே மேன் பட இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் சமீபத்தில் பார்த்துள்ளனர். படத்தை பார்த்து தனுஷின் வளர்ச்சியை மிகவும் பாராட்டியுள்ளனர். மேலும் அந்த படத்தில் தனுஷின் தோற்றத்தை பார்த்து பிரமித்துப் போயிருக்கின்றனர்.
அவரின் நடனம், சண்டை எல்லாவற்றையும் ரசித்து பாராட்டியுள்ளனர். உலகில் இவர் மாதிரி எந்த ஒரு நடிகரும் இல்லை என மனதார பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரூஸோ பிரதர்ஸ்-க்கும் ஜெகமே தந்திரம் படக்குழுவிற்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.