Connect with us
rv udhaykumar

Cinema History

தமிழ் சினிமாவில் கலக்கிய ஆர்.வி.உதயகுமார்!.. மறக்க முடியாத சின்னக்கவுண்டர்!..

புரட்சிக்கலைஞர், சூப்பர்ஸ்டார், உலக நாயகன், நவரச நாயகன் இவங்களுக்கு பெயர் சொல்லும் வெற்றிகளை கொடுத்த சூப்பர் ஹிட் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். இன்று தமிழ் சினிமாவில உச்சத்திலிருக்கும் நட்சத்திரங்களின் சினிமா வரலாற்றில் நிச்சயம் பல முக்கிய படங்கள் இருக்கும். அந்த படங்களைப் இயக்குன டைரக்டர்கள் முக்கிய பங்கு வகிச்சிருப்பாங்க. இப்படிப்பட்ட ஒரு வெற்றி இயக்குனரான ஆர்.வி.உதயகுமாரோட படங்கள் பற்றி பார்ப்போம்.

இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களை எடுத்ததிருக்குற இவரது முதல் படம் “உரிமை கீதம்”. 1988ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்துல பிரபு, கார்த்திக், ரஞ்சினி, மனோரமா நடிப்பில வெளிவந்த படம். இந்த படத்துக்கு நல்ல வறவேற்பு கிடைக்க, அடுத்து இவர் எடுத்த படம் சிவாஜி கனேசன், சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த “புதிய வானம்”. இதே மாதிரிதான் இவரோட மூன்றாவது படமும் ஹிட் ஆச்சு.

இதையும் படிங்க: கோட் பதிலாக தளபதி69ஐ கடைசி படமாக மாற்ற இதான் காரணம்… நெத்தியடியாக சொன்ன பிரபலம்…

அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் கிழக்கு வாசல். நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில ரேவதி, குஷ்பூனு நிறைய பேர் நடிச்சிருந்தாங்க. இந்த படத்தில் இளையராஜா போட்ட பாடல்களை இப்பவும் டீ கடையிலும், பஸ் என பல இடங்களிலும் இப்போவரை கேட்டுக்கிட்டு இருக்கிறோம். கார்த்திக் சினிமா கேரியர்ல இந்த படம் ரொம்ப முக்கியமான இடத்தை பிடிச்சது. “சிங்கார வேலன்” அட அதுவும் இவர் எடுத்த படம்தாங்க. கமல்ஹாசன், கவுண்டமனி, சார்லி, குஷ்பூ நடிப்பில் வெளிவந்த இந்த படத்துல காமெடி கலக்கு, கலக்குன்னு கலக்குச்சு. படம் பார்க்க வந்த ரசிகர்களை விழுந்து, விழுந்து சிரிக்க வைச்சிருப்பாரு.

மறைந்த கேப்டன், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிப்புல கிராமத்து மண்வாசனை மாறாமல் வந்து வெளிவந்த படம் “சின்ன கவுண்டர்”, அழுத்தமான கதை, சிறப்பான பாடல்கள்ன்னு படம் வேற லெவெல் ஹிட்டு, கிழக்கு வாசலுக்கு அப்புறமா கார்த்திக்கின் பெயர் இன்றும் சொல்லப்படுற அளவுல வந்த படம் “பொன்னுமணி”. அழகான கதாநாயகன் கார்த்திக் மாதிரியே இந்த படமும் அழகா வந்து மிகப்பெரிய ஹிட் ஆச்சு.

அட இவர் நம்ம சூப்பர் ஸ்டார வெச்சி படம் எடுக்கவே இல்லையான்னு கேட்கத்தோணுதில்ல, “எஜமான்” இந்த படத்தை எடுத்தது யாரு சாட்சாத் இதே ஆர்.வி. உதயகுமார்தான். வானவராயன்ங்கிற கேரக்டர்ல ரஜினி சும்மா நடிப்புலையும், தன்னோட துண்ட தோள்ல போடுற ஸ்டைலும் பின்னி பெடலெடுத்திருப்பாரு. மேலும், நகைச்சுவைக்கு கவுண்டமணி, செந்தில் இவங்க போக வில்லன் நடிகர் நம்பியார் வேற இந்த படத்துல் சின்ன, சின்ன காமெடியும் செஞ்சிருப்பாரு.

இதையும் படிங்க: நிஜமாவே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சினையா? பொன்னியின் செல்வனை அடுத்து சூடுபிடிக்கும் தக் லைஃப்

நதியா, மீனா நடிப்பில மெஹா ஹிட் ஆன “ராஜகுமாரன்”. ‘இளைய திலகம்’ பிரபு நடிப்பில வெளிவந்த படம். இதை இயக்கியதும் ஆர்.வி.உதயகுமார். இந்த படத்தின் பாடல்களும், காமெடி காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால், இது வெற்றிப்படமாக அமையவில்லை.

இப்படி பல வெள்ளி விழா படங்களை கொடுத்த இவருக்கு அப்பறமா வந்த படங்கள் எதுவும் குறிப்பிட்டு சொல்ற மாதிரி அமையல. கார்த்திக்கின் நடிப்பில் மீண்டும் “நந்தவன தேரு”. இந்த படம் சுமாரான வரவற்பையே ரசிகர்கள்கிட்ட பெற அடுத்து வந்த “கற்க கசடற” தோல்வி படமாக அமைந்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top