Cinema News
இந்த பாட்டு அவர்தான் பாடணும்!. இளையராஜா சொல்லியும் கேட்காம காத்திருந்த இயக்குனர்
இளையராஜா – எஸ்.பி.பி
இளையராஜா தான் இசையமைக்கும் பல பாடல்களை இவர்தான் பாட வேண்டும் என அடமெல்லாம் பிடிக்க மாட்டார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இல்லை எனில் மனோவையோ, யேசுதாஸையோ வைத்து பாட வைத்துவிடுவார். ஏனெனில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சினிமாவில் பாடிக்கொண்டிருந்தபோதே வெளிநாடுகளுக்கு சென்று நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். பல நாட்கள், சில சமயம் ஒரு மாதம் சுற்றுலா சென்று பல நாடுகளுக்கும் போய் ஆர்கெஸ்ட்ராவில் பாடிவிட்டு வருவார்.
ஆர்.வி.உதயகுமார்
இளையராஜாவின் முதல் சாய்ஸ் எஸ்.பி.பியாக இருந்தாலும் அவர் இல்லை என்றால் அவருக்காக காத்திருக்காமல் மனோ, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன் ஆகியோரை பாட வைத்து ரிக்கார்டிங் செய்து விடுவார். மலேசியா வாசுதேவனை இளையராஜா அழைத்தாலே ‘ஏன் எஸ்.பி.பி ஊர்ல இல்லயா?’ என்றுதான் கேட்பாராம்.
தமிழ் சினிமாவில் கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் என பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆர்.வி. உதயகுமார். கார்த்திக், ரேவதி, குஷ்பு, மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்து 1990ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் கிழக்கு வாசல். ஆர்.வி.உதயகுமார் இயக்கும் படங்களில் அவரே எல்லா பாடல்களையும் எழுதிவிடுவார்.
பச்சமலை பூவு நீ உச்சி மலைத்தேனு
அவரின் படங்களில் எல்லா பாடல்களையும் எஸ்.பி.பி மட்டுமே பாடுவார். தான் எழுதும் பாடல்களை அவர் மட்டுமே சிறப்பாக பாடுவார் என்பது ஆர்.வி. உதயகுமாரின் எண்ணம். அதேபோல், அவரின் படங்களில் இளையராஜா போட்ட அனைத்த பாடல்களுமே இனிமையான தாலாட்டு போலவே இருக்கும். கிழக்கு வாசல் படத்திற்காக ‘பச்சமலைப்பூவு நீ உச்சிமலைத்தேனு’ என்கிற பாடலை உதயகுமார் எழுதினார். அந்த பாடலை எஸ்.பி.பி பாட வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால், எஸ்.பி.பி ஊரில் இல்லை.
எனவே, வேறு பாடகரை வைத்து பாடலை ரிக்கார்டிங் செய்துவிடுவோம் என இளையராஜா சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு மாதம் ஆனாலும் சரி.. அவர்தான் பாட வேண்டும் என உதயகுமார் சொல்லிவிட்டாராம். எஸ்.பி.பி வந்த பின் உதயகுமார் எழுதியிருந்த பாடல் வாரிகளை பார்த்து ‘எவ்வளவு அழகான வரிகளை எழுதியிருக்கிறார்… என்ன அற்புதமான டியூன்’ என உருகி அந்த பாடலை அவ்வளவு சிறப்பாக பாடி கொடுத்தார் எஸ்.பி.பி.