காலம் தாண்டியும் பேசப்பட்ட கிளாசிக் திரைப்படத்திற்கு வந்த சோதனை… இவ்வளவு வருஷமாவா இழுத்தடிக்கிறது??

Bommai
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.பாலச்சந்தர். இவர் “அந்த நாள்”, “அவனா இவன்”, “நடு இரவில்”, “பொம்மை” போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவர் இயக்குனர் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் கூட. 1934 ஆம் ஆண்டு பேசும் படங்கள் பலவும் வெளிவந்துகொண்டிருந்த புதிதில் “சீதா கல்யாணம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் “ரிஷ்யஸ்ரிங்கர்”, “காமதேனு”, “ஆராய்ச்சிமணி” போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

S Balachander
எஸ்.பாலச்சந்தர் இசையில் ஆர்வம் உடையவர் என்பதால் பல திரைப்படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். குறிப்பாக வீணை கலைஞராக திகழ்ந்தமையால் இவரை வீணை பாலச்சந்தர் எனவும் அழைப்பார்கள்.
1954 ஆம் ஆண்டு இவர் இயக்கிய “அந்த நாள்” என்ற திரைப்படம் மிகவும் புதுமையான கதையம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது. மேலும் தமிழில் பாடல் இல்லாமல் வெளிவந்த முதல் திரைப்படமாகவும் இத்திரைப்படம் அமைந்தது. “அந்த நாள்” திரைப்படம் இப்போதும் கூட சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் மெய்யப்பச் செட்டியாரையே வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட நடிகை… இது புதுசா இருக்கே!!

Bommai
இந்த நிலையில் எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பொம்மை”. இத்திரைப்படம் காலம் தாண்டி கொண்டாடப்படும் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. எனினும் இத்திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் வெளிவந்ததாம்.
அதாவது எஸ்.பாலச்சந்தர் இயக்கிய “பொம்மை” திரைப்படத்திற்கு முந்தைய திரைப்படமான “அவனா இவன்” திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் அவரது அடுத்த திரைப்படமான “பொம்மை” திரைப்படத்தை வெளியிட எந்த விநியோகஸ்தர்களும் முன் வரவில்லையாம். மேலும் “பொம்மை” திரைப்படமும் ஓடாது என்று எண்ணினார்களாம். எனினும் அத்திரைப்படம் வெளிவந்த பிறகு அந்த எண்ணத்தை எல்லாம் தவிடுபொடியாக்கியது குறிப்பிடத்தக்கது.