அங்கேயும் வில்லனா முடியல.! தொண்டை வலிக்குது.! கதறும் தனுஷ்கோடி.!

by Manikandan |
அங்கேயும் வில்லனா முடியல.! தொண்டை வலிக்குது.! கதறும் தனுஷ்கோடி.!
X

தமிழ் சினிமாவில் நல்ல நடிகனாக வளர வேண்டும் என நினைத்து தானே இயக்குனராகி சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பின்னர் நடிகராக மாறி அதிலும் தனது கால் தடத்தை பலமாக பதித்து வருகிறார் இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

இவர் நடிக்கும் திரைப்படங்களை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். என்பது அவர் நடிக்கும் படத்தில் இருந்தே நன்றாக தெரிகிறது. நல்ல நடிக்க ஸ்கோப் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படித்தான் இறைவி, மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மான்ஸ்டர் என்று தேர்ந்தெடுத்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த தனுஷ்கோடி கதாபாத்திரம் இன்னும் பத்து வருடம் ஆனாலும் நின்று பேசும்.

இதையும் படியுங்களேன் - பீஸ்ட் நெல்சனின் சூப்பர் அட்வைஸ்.! ஒன்னு போதும் 50 வருஷம் நின்னு பேசும்.!

அந்தப் படத்தின் டப்பிங் முடிந்தது. போதும்டா சாமி தொண்டை எல்லாம் வலிக்குது இன்னும் பத்து நாள் விடுமுறை வேண்டும். என்று அவரே ட்வீட் செய்திருந்தார். அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிப்பது மட்டுமின்றி டப்பிங்கிலும் அதே தத்ரூபமான நடிப்பை கொண்டு வந்துவிடுவார்.

தற்போது அடுத்ததாக ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை படக்குழு அணுகி உள்ளதாம். அங்கும் இதே போல மெனக்கட்டு சூப்பர்ஹிட் வில்லனாக ஒரு கலக்கு கலக்க உள்ளார் என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது. ஏனென்றால் அது ஷங்கர் படமாச்சே கண்டிப்பாக பிரம்மாண்டமான திரைப்படம். அதில் பிரம்மாண்டமான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story