தேடி வந்த பத்மபூசன்… வேண்டாம் என்று திரும்பிக்கொண்ட எஸ்.ஜானகி…
தமிழ் சினிமா ரசிகர்களை தனது மழலை குரலால் பல ஆண்டுகள் வசீகரத்து வந்தவர் எஸ்.ஜானகி. “16 வயதினிலே” திரைப்படத்தில் இடம்பெற்ற “செந்தூரப் பூவே”, “ஜானி” படத்தில் இடம்பெற்ற “காற்றில் எந்தன் கீதம்”, “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் இடம்பெற்ற “புத்தம் புது காலை” போன்ற பல பிரபலமான பாடல்களை பாடிய எஸ்.ஜானகி இசை ரசிகர்களின் உள்ளங்களில் காலத்துக்கும் நீங்கா இடம்பிடித்திருப்பவர்.
பதம்பூசன் வேண்டாம்
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி எஸ்.ஜானகிக்கு பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் எஸ்.ஜானகி அந்த விருதை மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து கேரளாவில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இது குறித்து பேசிய எஸ்.ஜானகி,
“எனக்கு பதம்பூசன் விருது கொடுத்தார்கள். ஆனால் நான் அதனை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். நான் 50 வருடங்களுக்கும் மேலாக இசைத்துறையில் இருக்கிறேன். பல மொழிகளில் பல வித விதமான பாடல்களை பாடியிருக்கிறேன். அவார்டுக்காக நான் பாடியதில்லை. நான் பாடியது என்னுடைய ரசிகர்களுக்காகத்தான்” என்று கூறியிருந்தார்.
பாரத ரத்னா கொடுக்கட்டும்
மேலும் பேசிய அவர், “எனக்கு எந்த விருது மேலும் ஆர்வம் இல்லை. ஒரு வேளை அப்படி கொடுப்பதாக இருந்தால், எனக்கு பாரத ரத்னா கொடுக்கட்டும். அப்படி இல்லை என்றால் எனக்கு எந்த விருதும் வேண்டாம்” எனவும் கூறியிருக்கிறார்.
எஸ்.ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா ஆகிய இந்திய மொழிகளில் மட்டுமல்லாது சிங்களம், ஜப்பான், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சௌகார் ஜானகியிடம் சவால் விட்ட நடிகர் திலகம்… ஐயராகவே மாறிப்போன சிவாஜி கணேசன்… என்னவா இருக்கும்?