Cinema History
சிக்கலில் தவித்த சிவாஜி படத்திற்கு தானாக முன்வந்து உதவிய பிரபலம்!.. அதுக்கான காரணம் தெரியுமா?..
நடிகர் திலகம் சிவாஜியும், பத்மினியும் இணைந்து நடித்த பேசும் தெய்வம் படம் 1967ல் வெளியானது. அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இந்தப்படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கும் பெரிய நடிகைகளை கோபாலகிருஷ்ணன் ஒப்பந்தம் செய்து இருந்தார். அதனால் அவருக்கு அப்போது பணத்தட்டுப்பாடு வந்து விட்டதாம்.
இந்தப்படத்தை எப்படி ஆரம்பிக்கிறது என தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தார் கோபாலகிருஷ்ணன். இந்த நிலையில் அவரிடம் வந்து ஒருவர் உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவைப்பட்டால் எஸ்.எஸ்.வாசன் உதவி செய்வாராம் என்றார். இந்த உதவியை சற்றும் எதிர்பாராத கோபாலகிருஷ்ணன் மறுநாளே எஸ்.எஸ்.வாசனிடம் சென்று உதவி கேட்டாராம். எவ்வளவு வேண்டும் என்று வாசன் கேட்க, 2 லட்சம் ரூபாய் என்று சொன்னாராம். இப்படி கேட்டதும் வழக்கம் போல மற்றவர்கள் கேட்பார்கள். நீ எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுப்பாய் என்று எதுவும் கேட்கவில்லை. உடனே எடுத்துக் கொடுத்தாராம்.
அதுவும் உழைப்பை நம்பி வட்டியே இல்லாமல் கொடுத்தாராம். அதை ஆச்சரியமாகப் பார்த்தாராம் கோபாலகிருஷ்ணன். சொத்து சுகம்னு எல்லாவற்றையும் வைத்து தான் சந்திரலேகா படத்தை எடுத்தாராம் எஸ்.எஸ்.வாசன். அப்போதே ஏறக்குறைய 30 லட்சத்துக்கும் மேல் செலவழித்தாராம். பலரும் பணத்தை வீணாக செலவழிக்கிறார் என்று சொன்னார்களாம். அதன்பிறகு வாசனை இந்து பத்திரிகை அதிபரான சீனிவாச அய்யங்கார் அழைத்தாராம். அவர் 30 லட்ச ரூபாய் கடன் வாங்கி இந்தப் படத்தை எடுக்கறீயாமே என கேட்டாராம் சீனிவாச அய்யங்கார்.
ஆமா என்று சொன்னார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படம் எவ்வளவு வசூலிக்கும் என்று நினைக்கிறாய் என்று கேட்டாராம். தமிழகத்தில் 60 லட்சம், இந்தி டப்பிங்கில் 40 லட்சம் ஆக 1 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றார். 1 கோடி வரும் என்று சொல்ற. ஆனா இந்த 30 லட்சம் கடனுக்காக ஏன் வருத்தப்படுற என்றார். இந்தக் கடனுக்காக அல்ல. அதுக்கு வட்டியை எப்படிக் கட்டறதுன்னு தான் யோசிக்கிறேன் என்றார் கோபாலகிருஷ்ணன்.
அப்படின்னா வட்டி இல்லாம இந்த 30 லட்சம் கிடைச்சா படத்தை சீக்கிரமா எடுத்து முடிச்சிருவீயா என கேட்க, மிகுந்த உற்சாகத்துடன் உத்வேகத்துடன் முடிப்பேன் என்றாராம் கோபால். அடுத்த நிமிடமே 30 லட்சத்தை எடுத்து அவரிடம் கொடுத்தாராம் சீனிவாச அய்யங்கார். நீ இந்த சந்திரலேகா படத்தை எடுத்து முடித்துவிட்டு இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தா போதும். ஒரு பைசா கூட வட்டி வேண்டாம் என்றாராம்.
ஆனால் நீ ஒண்ணு செய்யணும். இதே மாதிரி திறமையானவங்க பணம் இல்லாம கஷ்டப்பட்டா நீயும் அவர்களுக்கு உதவி செய்யணும் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு கோபாலகிருஷ்ணனும் நிச்சயமா உதவி செய்யறேன் என்றாராம். மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.