ரஜினிக்கு அப்படிப்பட்ட கெட்டபுத்தி கிடையாது... எஸ்.வி.சேகர் சொன்ன சூப்பர் தகவல்

by sankaran v |
SVS R
X

SVS R

சமீபத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் தனுஷ் மற்றும் ரஜினி குறித்தும், தன்னோட நாடக அனுபவம் குறித்தும் இப்படி பேட்டி கொடுத்துள்ளார். தனுஷ்க்கு ரெட்கார்டு போட்டுருக்காங்க. ரஜினி சார் தான் இந்த விஷயத்தை எல்லாம் பண்றாருன்னு சொல்றாங்கன்னு ஒரு நிருபர் கேள்வி கேட்க அதற்கு இப்படி பதில் சொல்கிறார் எஸ்.வி.சேகர்.

தனுஷ் வந்து இப்போ இருக்கற இளைஞர்கள்ல நல்ல திறமையான நடிகர். 2வது படத்துல திறமையான டைரக்டர்னு நிரூபிச்சிட்டாரு. ஹாலிவுட் படத்துல அவரை நடிக்கக் கூப்பிட்டா தமிழ்நாட்டுக்கே பெருமைன்னு தான் நினைக்கணும்.

Raayan

Raayan

அவரோட பர்சனல் லைப்ல உள்ள விஷயத்தைத் தொழில் முறையில் கொண்டு வந்தால் தவறு. ரஜினியும் யாரையும் அழிக்கணும்னு நினைக்க மாட்டாரு. அவரை எனக்கு அபூர்வ ராகங்களில் இருந்து தெரியும். ரஜனியை முதன் முதலா என் ஸ்கூட்டர்ல ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டு வந்து ரெக்கார்டு பண்ணி விவித்பாரதியில போட்டது நான் தான்.

முதல்ல கல்வியில் ஒழுக்கத்தைத் தான் கற்றத் தரணும். அதைக் கற்றுக் கொடுத்தா எல்லாமே வரும். காமராஜர் என்ன படிச்சார்? ஆனா நேர்மையா இருந்தார். நான் ஒரு இடத்துல இருக்கேன். என்னை யாரும் கவுத்த முடியாதுன்னு சொல்ற அகந்தை வருது பார்த்தீங்களா. அது தான் நம்மை கவிழ்த்துமே தவிர வேறு யாரும் யாரையும் கவிழ்த்த முடியாது.

தயாரிப்பாளர் வாழ்ந்தால் தான் அந்தத் துறை வாழும். ரேசுக்குப் போறீங்க. ஓடுற குதிரை மேல தான பணம் கட்டுவீங்க. குதிரை ஓடவே இல்லையே. அப்படியே நிக்குதுல்ல. 5 வருஷமாச்சு. யாரும் என்னைப் படத்துக்குக் கூப்பிடவே இல்லையே. என்னை வச்சிப் படம் எடுக்கலாமே. ஏன் என்னை யாரும் கூப்பிடலை. எஸ்.வி.சேகருக்கு மார்க்கெட் இருக்கா, இல்லையான்னு தெரியாது. எஸ்.வி.சேகர் நடிப்பாரா இல்லையான்னு தெரியாதுன்னா... நான் ஆல்ரெடி 90 படம் நடிச்சிருக்கேன்.

இப்பவும் மாசத்துக்கு நாலு டிராமா வாரா வாரம் நடிச்சிக்கிட்டு இருக்கேன். அதனால நான் நடிப்பேன்கறது என்னோட ரசிகர்களுக்குத் தெரியும். என்னோட நாடக டிக்கெட்ல முதல் ரோ 1000 ரூபா. கடைசி ரோ 300 ரூபா. அதாவது ஒரு படத்தினுடைய அதிகபட்ச டிக்கெட்டை விட ஜாஸ்தி என்னோட டிராமா டிக்கெட். அது இன்னும் ஹவுஸ்புல்லா தான் போய்க்கிட்டு இருக்கு. ஆனா என் திறமையை நீ கண்டுபிடிக்கலையேன்னு நான் ஏன் கதறணும். எனக்கு அது அவசியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story