ஒரு ஹிட்டு கொடுத்துட்டா ஆடக்கூடாது.... சிம்புவை திட்டிய எஸ்.ஏ.சி...
சிம்புவுக்கு பல வருடங்களுக்கு பின் ஹிட் கொடுத்துள்ள திரைப்படம் மாநாடு. அதுவும் பல தடைகளை மீறி இப்படம் ஒருவழியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து தற்போது ரூ.100 கோடி கிளப்பிலும் இப்படம் இணைந்துள்ளது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் ,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை மாநாடு படக்குழுவினர் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் கொண்டடினர். இந்த விழாவில் படக்குழுவினர் மற்று திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், படத்தின் ஹீரோ சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் ‘இந்த விழாவுக்கு சிம்பு வந்திருக்க வேண்டும். வெற்றி வந்தவுடன் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. அவரை நம்பித்தான் சுரேஷ் காமாட்சி பணத்தை முதலீடு செய்தார்.
அவர் வாராதது வருத்தமாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது ஏப்படி இருந்தோமோ அதுபோல் படம் வெளியான பின்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றொரு வெற்றி கிடைக்கும். இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய திருப்பம். ஆனால், இதை கொண்டாட அவர் வரவில்லை. படப்பிடிப்பு இருந்தாலும் அவர் வந்திருக்க வேண்டும்’ என அவர் அறிவுரை செய்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் மாநாடு படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.