என் உயிரை சந்தித்தேன்!.. விஜயகாந்தை நேரில் சந்தித்த எஸ்.ஏ.சி.. வைரல் புகைப்படங்கள்

by சிவா |   ( Updated:2023-01-31 12:05:18  )
vijayakanth
X

மதுரையில் பிறந்து வளர்ந்து சினிமா மீது கொண்ட ஆசையில் சென்னை வந்து வாய்ப்புகளுக்காக அலைந்து சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து அப்படியே ஹீரோ ஆனவர் நடிகர் விஜயகாந்த். தமிழ்நாட்டிலேயே ரஜினியை விட விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம் இருந்த காலம் உண்டு. குக்குராமத்தில் கூட இவரின் ரசிகர் மன்ற போர்ட்டை நாம் பார்க்கலாம்.

kanth1

vijayakanth

ஒரு கட்டத்தில் எல்லோராலும் கேப்டன் என அழைக்கப்பட்டார். நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர், எம்.ல்.ஏ, எதிர்கட்சி தலைவர் என வாழ்க்கையில் பல படிகளை தாண்டி சென்றவர். மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். வெள்ளந்தி மனதை கொண்டவர். எம்.ஜி.ஆரை போல பிறருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர். சினிமாவில் பலரையும் வளர்த்துவிட்டவர். இவரது அலுவலகத்திற்கு சென்றால் மதிய சாப்பாடு உறுதி. சென்னையில் சினிமா வாய்ப்புக்காக அலைந்த பலருக்கும் உணவளித்த வள்ளல் அவர்.

vijayakanth

கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இன்று அவர் தனது திருமணம் நாளை கொண்டாடினார்.

vijayakanth

இந்நிலையில், சினிமாவில் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். மேலும், அது தொடர்பான புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘என் உயிரை சந்தித்த போது’ என பதிவிட்டுள்ளார்.

vijayakanth

vijayakanth

அந்த புகைப்படங்களில் விஜயகாந்தின் தோற்றத்தை பார்த்த அதிர்ந்து போயுள்ளனர். ஏனெனில், பாதி உடல் இளைத்து மெலிந்து போயுள்ளார். எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி மாறிவிட்டாரே என அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கேப்டன் உடல் நலம் தேறி பழைய தோற்றத்திற்கு மாற பிரார்த்திப்பதாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமண நாளை குடும்பத்தோடு கொண்டாடிய கேப்டன்!.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

Next Story