Cinema News
நல்ல வேளை விஜய் அவங்க கிட்ட சிக்கல!.. பாரதிராஜா ,கௌதம் மேனன் குறித்து எஸ் ஏ சி பரபரப்பு பேட்டி..
கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இவரின் வளர்ச்சியை அவருடன் ஆரம்பத்தில் இருந்த நட்பு வட்டாரங்களும் சரி நெருங்கிய பிரபலங்களும் சரி நெருங்கிய உறவினர்களும் சரி ஒரு ஆச்சரிய பார்வையுடனே பார்த்துக் கொண்டு வருகிறார்கள். ஏனெனில் ஆரம்ப காலங்களில் அவர் சந்தித்து வந்த விமர்சனங்கள் ஏராளம்.
விஜயின் நிறத்தையும் முகத்தையும் விமர்சித்து ஏராளமான விமர்சனங்கள் அப்போதைய பத்திரிகைகளில் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் உழைப்பையும் கடின முயற்சியையும் நம்பி இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் விஜய்.
அதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் அவருடைய தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் சினிமாவில் வருவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 50 படங்களை இயக்கி ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக சினிமாவில் தடம் பதித்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் முதலில் நடிக்க வேண்டும் என்று கூறியதற்கு முதலில் தயங்கியவரும் எஸ் ஏ சந்திரசேகர் தான்.
அதன் பிறகு நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அவரின் நடிப்பை பார்த்து மிரண்டு போனார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதனாலேயே விஜயை வைத்து சந்திரசேகரே இரண்டு மூன்று படங்களை இயக்கினார். மாணவன் ,ரசிகன் போன்ற படங்கள் விஜய்க்கு ஒரு நடிகர் என்ற ஒரு அந்தஸ்தை பெற்றுத் தந்த படமாக அமைந்தது.
அதன் பிறகு சந்திரசேகர் விஜயை தன்னைவிட பெரிய இயக்குனர்களிடம் அறிமுகப்படுத்தி அவரை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பினார். அதனால் விஜயின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இயக்குனர் பாரதிராஜாவிடம் சென்றாராம். ஆனால் பாரதிராஜா “நீயே ஒரு பெரிய இயக்குனர், என்கிட்ட எதுக்கு வர” என்று சொல்லி சந்திரசேகரை திருப்பி அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு இயக்குனர் கௌதம் மேனனிடமும் விஜயின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு போனாராம். ஆனால் அதுவும் தவறி விட்டதாம் .இதையெல்லாம் குறிப்பிட்டு பேசிய எஸ்.ஏ.சி “ஆரம்பத்தில் நல்ல இயக்குனர்கள் எல்லாம் விஜய்யை பயன்படுத்த தவறி விட்டார்கள். அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். என்கிட்ட வந்ததனால்தான் விஜய் ஒரு கமர்சியல் ஹீரோவாக முடிந்தது “என்று ஒரு விழா மேடையில் கூறினார்.
ஆனால் கௌதம் மேனனிடம் விஜயின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு போய் வாய்ப்பு கேட்டதாக கூறிய எஸ்.ஏ.சி-யின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது . ஏனெனில் கௌதம் மேனன் சினிமாவில் அறிமுகம் ஆனது 2001 ஆம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் தான். ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் ஒரு நல்ல ஸ்டார் அந்தஸ்தை பெற்று விட்டார் . அப்படி இருக்கையில் எஸ். ஏ.சி ஏன் இப்படி பேசினார்? என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.