வலைப்பேச்சுவை கண்டபடி கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி?? இப்படி கோபப்படுற அளவுக்கு என்னப்பா ஆச்சு??

by Arun Prasad |
Valaipechu
X

Valaipechu

விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே போல் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே நாளில் வெளிவரவுள்ளதால் இந்த வருட பொங்கல், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது.

இந்த நிலையில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலில் பத்திரிக்கையாளர்கள் சிலர் விஜய்யின் தாத்தா வாஹினி ஸ்டூடியோவில் வேலை பார்த்ததாகவும், அப்போது கைக்குழந்தையாக இருந்த விஜய்க்கு வாஹினி ஸ்டூடியோஸின் உரிமையாளர் நாகி ரெட்டி விஜய் என்று பெயர் வைத்ததாகவும் ஒரு தகவலை கூறினார்களாம்.

SA Chandrasekhar and Vijay

SA Chandrasekhar and Vijay

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எஸ்.ஏ.சி அந்த பிரபல யூட்யூப் சேன்னலை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது “விஜய் என்றால் வெற்றி என்று அர்த்தம். அதனால்தான் நான் என் பையனுக்கு விஜய் என்று பெயர் வைத்தேன். ஆனால் வலைத்தளத்தில் மூன்று பேர் வரிசையாக உட்கார்ந்துகொண்டு விஜய்யின் பெயர் காரணத்திற்கு வேறு ஒரு கதையை கூறுகிறார்கள்.

விஜய்யின் தாத்தா வாஹினி ஸ்டூடியோவில் வேலை பார்த்தாராம், எனக்கு குழந்தை பிறந்தவுடன் அதை தூக்கிக்கொண்டு நாகி ரெட்டியிடம் போனாராம், நாகி ரெட்டிதான் விஜய் என்று பெயர் வைத்ததாக ஒரு புது கதையை சொல்றாங்க. அதாவது மீடியாக்களாகிய நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள். பொய்களை சொல்லவேண்டாம்” என கடுமையாக சாடினார்.

இதையும் படிங்க: “நீங்கதானே என்னைய கலாய்ச்சது??”… ரஜினியிடம் வசமாக சிக்கிய லவ் டூடே இயக்குனர்… மாட்டிக்கிட்டீங்களே ப்ரோ!!

Valaipechu

Valaipechu

விஜய்க்கு நாகி ரெட்டிதான் பெயர் வைத்தார் என்ற தகவலை கூறியது வலைப்பேச்சு யூட்யூப் சேன்னல்தான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Next Story