விஜய்க்கு போட்டியாக வந்த பிரபல நடிகர்… கட்டம்கட்டி தூக்க பிளான் போட்ட எஸ்.ஏ.சி… என்னப்பா சொல்றீங்க!!
தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக திகழ்ந்து வரும் விஜய், நடிக்க வந்த புதிதில் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக அவரது உருவத்தை கேலி செய்து பல வசைகளும் எழுந்தன. “இவனெல்லாம் ஹீரோவா?” போன்ற பேச்சுக்கள் அடிபட்டன.
விஜய்யின் முதல் திரைப்படமான “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோதே முதல் நாள் படப்பிடிப்பில் அவர் உருவத்தை பார்த்து அவரது காது பட கேலி செய்தார்களாம். அன்று இரவு விஜய் தனது அறையில் வெகு நேரம் அழுதாராம். அப்போது எஸ்.ஏ.சி, “சினிமாங்குறது இப்படித்தான் இருக்கு. இப்போ உனக்கு நல்லா புரிஞ்சிருக்கும். இது மாதிரியான விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டுத்தான் வரனும்” என கூறி அவரை தேற்றினாராம்.
எனினும் அதன் பின் எந்த விமர்சனம் வந்தாலும் மனம் நோகக்கூடாது என்று திடப்படுத்திக்கொண்டுதான் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு வந்தாராம் விஜய். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார் விஜய். ஆனால் எந்த திரைப்படமும் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
இதற்கு பிறகுதான் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய “பூவே உனக்காக” திரைப்படத்தில் விஜய் நடித்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்க்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது. குறிப்பாக குழந்தைகளுக்கு விஜய்யை பிடிக்கத் தொடங்கியது. மேலும் விஜய்யின் கேரியரில் ஒரு திருப்புமுனையான திரைப்படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, விஜய்யின் வளர்ச்சிக்குப் பிறகு அவருக்கு போட்டியாக வளர்ந்து வந்த நடிகர்களை எஸ்.ஏ.சி. பிளான் போட்டுத் தூக்கியதாக ஒரு தகவலை சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது எஸ்.ஏ.சி., விஜய்க்கு யார் யாரெல்லாம் போட்டியாக வந்தார்களோ அவர்களை எல்லாம் பிளான் போட்டுத் தூக்கினாராம். அந்த நடிகர்களை வைத்து அவர் திரைப்படங்களை இயக்குவாராம். அந்த படம் பிளாப் ஆகிவிடுமாம். அப்படியே அந்த நடிகர்கள் ஓரங்கட்டப்படுவார்களாம்.
அப்படித்தான் ரவி கிருஷ்ணாவை வைத்து “சுக்ரன்” படத்தை இயக்கினாராம் எஸ்.ஏ.சி. அதே போல் நரேனை வைத்து “நெஞ்சிருக்கும் வரை” திரைப்படத்தை இயக்கினாராம் எஸ்.ஏ.சி.
இதையும் படிங்க: இரண்டாம் உலகப் போர்… வெறும் பரோட்டாவை வைத்து பாட்டெழுதிய புரட்சி கவிஞர்… வேற லெவல்!!
மேலும் ஸ்ரீகாந்த் வளர்ந்து வந்தபோது அவரை எப்படியாவது காலியாக்க வேண்டும் என நினைத்தாராம் எஸ்.ஏ.சி. அதன் படி அவரை வைத்து ஒரு படம் இயக்கலாம் என எண்ணி, அவரை அணுகினாராம். ஆனால் ஸ்ரீகாந்த்திற்கு நெருக்கமாக இருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை பாதுக்காத்தனராம். எஸ்.ஏ.சி ஒரு கட்டத்தில் ஸ்ரீகாத்துக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினாராம்.
அப்போது ஸ்ரீகாந்த்துக்கு நெருக்கமான சில பத்திரிக்கையாளர்கள் எஸ்.ஏ.சியிடம் “அவர்தான் நடிக்க மாட்டார்ன்னு சொல்றாருல. அப்ரம் ஏன் தொந்தரவு செஞ்சிக்கிட்டே இருக்கீங்க. உங்க மகனை வச்சே ஒரு படம் பண்ணுங்களேன்” என கூறினார்களாம் பத்திரிக்கையாளர்கள். அதன் பிறகுதான் ஸ்ரீகாந்த்தை டார்ச்சர் செய்யாமல் இருந்தாராம் எஸ்.ஏ.சி. ஆனால் எஸ்.ஏ.சியின் இது போன்ற நடவடிக்கைகளில் துளி கூட ஈடுபாடு இல்லாமல் இருந்தாராம் விஜய்.