சண்டைக் காட்சியில் விஜய்க்கு நடந்த விபத்து... கடுமையாக திட்டிய எஸ்.ஏ.சி... ஏன் தெரியுமா?

by Arun Prasad |
சண்டைக் காட்சியில் விஜய்க்கு நடந்த விபத்து... கடுமையாக திட்டிய எஸ்.ஏ.சி... ஏன் தெரியுமா?
X

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால் சிறு வயதிலேயே விஜய் சினிமாவிற்குள் வந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக "வெற்றி", "குடும்பம்', "நான் சிகப்பு மனிதன்", 'வசந்த ராகம்", "சட்டம் ஒரு விளையாட்டு" போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து விஜய் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் "நாளைய தீர்ப்பு".

Naalaiya Theerpu Movie

Naalaiya Theerpu Movie

விஜய் சிறு வயதில் இருந்தே தனது தந்தையிடம் "என்னை ஹீரோவாக வைத்து படம் எடுங்கள்" என கூறிக்கொண்டே இருப்பாராம். ஆனால் எஸ்.ஏ.சிக்கு விஜய் ஒரு அரசு அதிகாரியாக ஆக வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. எனினும் விஜய்யிடம் "கல்லூரி படிப்பை முதலில் முடி. அதன் பின் உன்னை வைத்து படம் எடுக்குறேன்" என கூறி அப்போது சமாளித்துள்ளார். ஆனால் விஜய் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே "என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குங்கள்" என கூறிக்கொண்டே இருந்தாராம். அதன் பிறகுதான் "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.

SA Chandrasekhar

SA Chandrasekhar

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன், "நாளைய தீர்ப்பு" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Naalaiya Theerpu

Naalaiya Theerpu

அதாவது "நாளைய தீர்ப்பு" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு சண்டை காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்களாம். அதில் ஒரு சுவரை உடைத்துக்கொண்டு விஜய் வெளியில் வருவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். அந்த காட்சியில் நடிக்கும்போது விஜய்யின் கையில் அடிபட்டுவிட்டதாம். விஜய் தனது கையில் அடிபட்ட வலியால் துடித்துக்கொண்டிருக்க, அங்கே வந்த எஸ்.ஏ.சி, "சினிமான்னா இப்படி கஷ்டப்பட்டுத்தான் ஆகனும். நீதான் ஹீரோவாக ஆகனும் ஹீரோவா ஆகனும்ன்னு சொல்லிட்டு இருந்த. ஹீரோ ஆகனும்ன்னா அதுக்கான கஷ்டத்தை அனுபவிச்சித்தான் ஆகனும்" என திட்டினாராம். அதன் பின் விஜய் அந்த வலியை பொறுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் நடிக்கத் தொடங்கினாராம்.

இதையும் படிங்க: பாடல் பிடித்து போன் செய்த ரசிகை.. – அஞ்சாவது நாளே விஜய் ஆண்டனி செய்த காரியம்!..

Next Story