எஸ்.ஏ.சிக்கு வீடு வாங்கி கொடுத்த தயாரிப்பாளர்!.. ஆனால் வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவமானப்படுத்திய சம்பவம்..
தமிழ் சினிமாவில் புரட்சிக்கரமான இயக்குனர் என பலராலும் அறியப்படுபவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பெரும்பாலும் விஜயகாந்தை வைத்து ஏராளமான புரட்சிக்கரமான படங்களை எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். சட்டம் ஒர் இருட்டறை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் .
தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். இவரின் சமீபகால படமான நான் கடவுள் இல்லை என்ற படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என தன்னை சினிமாவிற்காகவே அர்ப்பணித்தவர் எஸ்.ஏ.சி. இந்த நிலையில் இவரை பற்றிய சில தகவல்களை பிரபல சினிமா தயாரிப்பாளரான எம்.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதாவது எம்.முத்துராமன் தயாரிப்பில் எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஓம் சக்தி’ என்ற திரைப்படம். இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அப்போது எஸ்.ஏ.சிக்கு சம்பளமாக 30000 ரூபாயாம். அந்த சமயத்தில் எஸ்.ஏ.சி வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாராம்.
இதையும் படிங்க : “பொய் சொல்லத் தெரிஞ்சா சொல்லுங்க”… தன்னிடம் கப்சா விட்ட ஒளிப்பதிவாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்…
இப்பொழுது சொந்தவீடான வளரசவாக்கம் வீட்டின் நிலத்தை தயாரிப்பாளரான முத்துராமன் தான் வாங்கிக் கொடுத்தாராம். அப்போது முத்துராமனின் நெருங்கிய நண்பர் தான் அந்த நிலத்தை வைத்திருந்தாராம். எல்லாருக்கும் 60000 ரூபாய் என்று சொல்லிக் கொண்டு இருந்த அந்த நண்பர் முத்துராமனுக்காக 40000 ரூபாய்க்கு கொடுத்தாராம்.
அதை வாங்கி எஸ்.ஏ.சிக்கு கொடுத்திருக்கிறார் முத்துராமன். இது நடந்த சில நாள்களுக்கு பிறகு ஒரு சின்ன உதவிக்காக எஸ்.ஏ.சியை பார்க்க முத்துராமன் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் காரில் எங்கேயோ கிளம்பி கொண்டிருந்தாராம். இவரை பார்த்ததும் அவரது கூர்கா மூலம் இப்பொழுது பார்க்க முடியாது, அப்புறமாக வாங்க என்று சொல்லச் சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சி.
இதை அந்தப் பேட்டியில் முத்துராமன் கூறும்போது நேரிடையாக அவரே சொல்லியிருந்தால் கூட ஒன்றும் தோன்றியிருக்காது. கூர்கா மூலம் சொன்னது தான் பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டது. இதை நான் கடைசிவரை மறக்க முடியாது என்று வேதனைப்பட்டார்.