இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஏ. ராஜ்குமார்...ஹீரோயின் யார் தெரியுமா?....
1987ம் ஆண்டு வெளிவந்த ‘சின்னப்பூவே மெல்ல பேசு’திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் எஸ்.ஏ.ராஜசேகர். இப்படத்திலேயே அவர் இசையமைத்த சின்னப்புவே மெல்லப் பேசு, சங்கீத வானில், ஏ புள்ள கருப்பாயி ஆகிய பாடல்கள் மெகா ஹிட் அடித்தது.
அதன்பின் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். குறிப்பாக இயக்குனர் விக்ரமன் இயக்கும் படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர் அவர் இசையில் வெளிவந்த புது வசந்தம்,பூவே உனக்காக, சூர்ய வம்சம், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து அப்படங்களும் ஹிட் ஆனது.
ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என கடுமையான போட்டி காரணமாக அவர் அதிக படங்களில் இசையமைக்கவில்லை. கடந்த 20 வருடங்காளகவே அவர் அதிக படங்களுக்கு இசையமைக்க வில்லை.
இந்நிலையில், தற்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார். அவர் உருவாக்கிய கதையை நடிகை டாப்ஸியிடம் கூற அவரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். எனவே,விரைவில் எஸ்.ஏ.ராஜ்குமாரை கட் ஆக்ஷன் கூறும் இயக்குனராக பார்க்கலாம்.