Connect with us

Cinema News

இந்த வாரமும் எதுவும் தேறாது!.. பாக்ஸ் ஆபிஸை படுக்கப் போட்டு மிதிக்கும் தமிழ் சினிமா!..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக அமைவது சகஜம் தான். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் சினிமா துறையில் வெற்றி தோல்வி இரண்டுமே சகஜமான ஒன்றுதான். ஆனால், ஆறு மாதங்களாக ஒரு பெரிய ஹிட் படத்தை கூட கோலிவுட் சினிமா கொடுக்கத் தவறி வருவது பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்தாண்டு மே இறுதிவரை வெளியான பல படங்கள் ஃபிளாப் ஆகியுள்ளன. பல கோடி முதல் போட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் கடைசியில் தெருக்கோடிக்கு வந்ததுதான் மிச்சம் என்கின்றனர்.

இதையும் படிங்க: நடிகரால் தற்கொலைக்கு முயன்ற ஸ்ரீபிரியா! இப்படி ஒரு காதலா? எந்த நடிகருடன் தெரியுமா?

இதில், சுந்தர் சி இயக்கி தமன்னா மற்றும் ராஷி கன்னாவுடன் இணைந்து நடித்த அரண்மனை 4 திரைப்படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறியது என்கின்றனர். இந்த ஆண்டு வெளியான முதல் 100 கோடி ரூபாய் கோலிவுட் படமாக அரண்மனை 4 படத்தை அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவினின் ஸ்டார் திரைப்படம் பெரிதாக கல்லா கட்டவில்லை. கடந்த வாரம் வெளியான சந்தானம் திரைப்படம் ஒரு நாள் ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் படுத்து விட்டது.

இதையும் படிங்க: சக்கைப்போடு போட்டாளே சவுக்கு கண்ணால!.. சமந்தாவை இப்படி பார்த்தா ராத்திரி தூக்கம் போயிடுமே பசங்களா!..

இன்று ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் படத்தையும் பார்க்க பெரிதாக மக்கள் ஆர்வம் செலுத்தவில்லை. ராமராஜனின் சாமானியன் டீசர் மற்றும் டிரைலரை பார்த்த பின்னர் தியேட்டர் பக்கம் செல்லவே கூடாது என ரசிகர்கள் நினைத்து விட்டனர்.

நாளை வெளியாக உள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிடி சார் படத்துக்கும் டிக்கெட் புக்கிங் பெரிதாக இல்லை என்றும் இந்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் தமிழ் சினிமா பலத்த அடிவாங்கும் என்றும் கூறுகின்றனர். ராயன், இந்தியன்2, கோட், வேட்டையன், கங்குவா மற்றும் விடாமுயற்சி படங்கள் வெளியானால் தான் பாக்ஸ் ஆபிஸ் களைகட்டும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தம்பிக்காக அண்ணன் எடுத்த ரிஸ்க்! ஒரேடியா உட்கார வைத்த ஏஜிஎஸ்.. தனி ஒருவனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

google news
Continue Reading

More in Cinema News

To Top