Categories: Cinema News latest news

‘செம்பருத்தி’ சீரியல் நடிகையை மத ரீதியா டார்ச்சர் பண்ண பெற்றோர்….! தக்க பதிலடி கொடுத்த நடிகை…

zee தமிழில் மிகவும் பிரபலமாக ஒடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான சீரியல் செம்பருத்தி. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக மக்களின் அபிமான தொடராக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பார்வதியாக நடிக்கும் சபானா மற்றும் கார்த்திக் இவர்கள் அபிமான நட்சத்திரங்களாகவே மாறிவிட்டனர்.

இதனிடையில் சீரியலில் இருந்து கார்த்திக் ஏதோ ஒரு காரணத்தால் விலகிவிட மக்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது. அதன் பின் நாயகி சபானாவில் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் திடீரென காதலித்த ஒருவரை கரம் பிடித்த வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். அவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி தொடரில் நடிக்கும் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய போது சபானாவின் வீட்டில் அவரது தாய் தினமும் சாப்பிட்டாயா என்று கேட்டதை விட தயவுசெய்து ஒரு இந்து பையனை மட்டும் காதலித்து திருமணம் செய்யாதே என்று கூறுவார்களாம். அவரது பாட்டியும் அதே தான் சொல்வார்களாம்.

இதை தினமும் கேட்டு கேட்டு இந்து பையன் மேல் ஒரு ஈர்ப்பே வந்து விட்டது. அதிலிருந்து முடிவு பண்ணிதான் கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது இந்து பையனுடன் தான் நடக்க வேண்டும் என ஆர்யனை திருமணம் செய்ததை தெரிவித்தார்.

Published by
Rohini