Connect with us
jeyam ravi

Cinema News

வளர்ப்பு மகனால் வந்த குடைச்சல்.. வீட்டோட மாப்பிள்ளை! ஜெயம் ரவி – ஆர்த்திக்கு என்னதான் நடந்தது?

Jayam Ravi – Aarthi: இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து பற்றிய செய்தி தான். ஜெயம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ரவி முதல் படத்திலிருந்து தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் ஒரு பெரிய வரவேற்பை பெற்றார்.

ஆரம்ப காலத்தில் இவருடைய அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஒரு சில படங்களில் நடித்து அந்த படங்களும் வெற்றி பெற தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். இன்னொரு பக்கம் அவருடைய அப்பா சினிமாவில் எடிட்டராக இருந்தவர். அதனால் இவருடைய குடும்பத்தின் மீது திரையுலக பிரபலங்கள் மத்தியில் ஒரு மதிப்பும் மரியாதையுமே வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: தெறி மாஸ் லுக்கில் அஜித்குமார்!.. வெளியான குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர்!…

ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு மகன் டிக் டிக் டிக் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருப்பார். நட்சத்திர ஜோடிகளே வியந்து பார்க்கும் அளவுக்கு இவர்களுடைய ஜோடி பிரம்மாதமாக பேசப்பட்டன. அவருடைய மனைவி ஆர்த்தி சினிமாவில் இல்லை என்றாலும் ஹீரோயின் அளவுக்கு அழகாகவும் நிறமாகவும் தோற்றத்தில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருப்பார்.

இந்த நிலையில் இவர்களுடைய இந்த திடீர் விவகாரத்து பிரச்சனை தமிழ் சினிமாவில் இருக்கும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என பிரபல மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதுவரைக்கும் ஜெயம் ரவி அவருடைய மாமியார் வீட்டில் தான் இருந்தாராம். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு ஜெயம் ரவி வீட்டில் சம்மதிக்கவில்லையாம்.

இதையும் படிங்க: எம்.எஸ்.வி கொடுத்த முதல் வாய்ப்பு!.. இப்படி ஆகிப்போச்சே!.. எஸ்.பி.பி வாழ்வில் நடந்த சோகம்!..

தற்கொலை செய்து கொள்வோம் என இருவருமே சொல்ல அதன் பிறகு தான் இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆர்த்தியும் ஜெயம் ரவியும் இணைவதற்கு ஒரு காரணமாக இருந்தவர் நடிகர் குஷ்பூ என சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். ஏனெனில் இவர்கள் இருவரின் சந்திப்புக்கு காரணமாக இருந்தவரே குஷ்பு தான் என கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியின் மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயக்குமாருக்கு ஒரு வளர்ப்பு மகன் இருக்கிறாராம். அவர்தான் அவருடைய புரொடக்ஷன் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வாராம். அவருடைய பெயர் சங்கர் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஜெயம் ரவி பெரிய குடைச்சலில் இருந்ததாகவும் சபீதா ஜோசப் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இனிமே உனக்கு இது வேண்டாம்!. சிவாஜி சொன்ன அட்வைஸ்!.. தப்பித்த கண்ணதாசன்!..

ஏனெனில் ஒரு பக்கம் மாமியார் தயாரிப்பாளர். இன்னொரு பக்கம் அவருடைய வளர்ப்பு மகன் புரொடக்ஷன் வேலை என அவரவர் கருத்துக்களை சொல்ல ஜெயம் ரவியின் கருத்து அந்த வீட்டில் எடுபடாமல் போயிருக்கிறது. இதனால் ஒரு ஈகோ வளர்ந்து இந்த அளவு விவாகரத்து வரைக்கும் சென்றிருப்பதாக சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top