கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு சினிமாவில் நடிக்க போகிறேன் என்று இளைஞனாக இருந்த விஜய் சொன்னபோது அதை மறுத்தார் அவரின் தந்தை எஸ்.ஏ.சி. ஏனெனில் சினிமாவில் இருக்கும் கஷ்டங்கள் அவருக்கு தெரியும். சினிமாவில் நீடித்து நிலைத்திருக்க கடுமையான உழைப்பை போட வேண்டும். விமர்சனங்களை தாங்க வேண்டும். அதுவெல்லாம் தனது மகனுக்கு தேவையில்லை என்று அப்போது நினைத்தார் எஸ்.ஏ.சி. ஆனால் விஜய் அடம்பிடிக்கவே தனது சொந்த காசை போட்டு நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தில் அவரை அறிமுகம் செய்துவிட்டார் எஸ்.ஏ.சி.
அதன் பின்னரும் விஜயை வைத்து படமெடுக்க யாரும் முன் வராததால் தொடர்ந்து தனது சொந்த செலவிலேயே அவரை வைத்து படங்களை இயக்கினார். ஒரு கட்டத்தில் விஜய் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து முக்கிய நடிகராக மாறினார். விஜய்க்கு முக்கிய ஆலோசகராக எஸ்.ஏ.சி இருந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எஸ்.ஏ.சி தனது மனைவியுடன் தனியாக வசிக்கத் தொடங்கினார்.
மேலும், விஜய் அவ்வப்போது என்னை வந்து பார்த்தால் போதும் என ஃபீலிங்காக பேசி பேட்டி கொடுத்தார். ஒருபக்கம், விஜய் அரசியல் கட்சி துவங்கிய போது புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சித்தும் பேசினார் எஸ்.ஏ.சி. அதேநேரம் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடந்த தவெக மாநாடுகளில் எஸ்.ஏ.சி கலந்துகொண்டு விஜயின் பேச்சை பாராட்டி பேசினார்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெறவுள்ள நிலையில் விஜயின் அம்மா ஷோபாவும், அப்பா எஸ்.ஏ.சியும் மலேசியா சென்றுள்ளனர். அப்போது விஜயை விட ஒரு எஸ்.ஏ.சி அணிந்திருந்த ஆடை மிகவும் ஸ்டைலாக இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
