திருமண நாளில் இப்படி ஒரு சர்ப்ரைஸா? தனது மனைவிக்கு எஸ்.ஏ.சி கொடுத்த காஸ்ட்லியான கிஃப்ட்

sac
SA Chandrasekar:தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என அழைக்கப்படுபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய படைப்புகள் அனைத்தும் மக்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. சட்டத்தில் நடக்கும் சீர்கேடு ,அங்கு இருக்கும் ஓட்டை என அனைத்தையும் தன் படங்களில் வெளிப்படையாக மிகவும் தைரியமாக கூறிய ஒரே இயக்குனர் தான் எஸ் ஏ சந்திரசேகர். 80 வயதாகியும் இன்றுவரை சினிமாவில் இன்னும் பயணித்துக் கொண்டு இருக்கிறார் .
இயக்குனராக பல சாதனைகளை படைத்தாலும் இப்போது நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராக படங்களையும் தயாரித்திருக்கிறார். முதலில் அரசாங்க வேலையில் இருந்த எஸ்ஏ சந்திரசேகர் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையினால் இந்த சினிமா துறைக்குள் நுழைந்து இருக்கிறார். முதன் முதலில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சவுண்ட் இன்ஜினியராக தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.
அதன் பிறகு டிஎன் பாலு என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். எங்க வீட்டுப் பிள்ளை, நான் ஆணையிட்டால், அஞ்சல் பெட்டி 520, திருமாங்கல்யம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். முதன்முதலில் பச்சை குழந்தை என்ற படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஏ சந்திரசேகர். அதனை தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை ,சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த சந்திரசேகர் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

விஜயகாந்த் வைத்து மட்டும் அதிக திரைப்படங்களை இயக்கியவர். திரையுலகில் இன்று நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜயை அறிமுகம் செய்து வைத்ததே இவர்தான். அது மட்டுமல்ல அவரை சரியான பாதைக்கு கொண்டு போக வேண்டும், சினிமாவில் ஒரு லட்சிய இடத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் விஜய்க்கு உருவாக்கியவர் எஸ்ஏ சந்திரசேகர் தான் இடையில் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் இடையே சில பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தனது தந்தையுடனான கருத்து வேறுபாட்டை மறந்து அவருடன் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்.
அரசியல் ரீதியாக விஜய்க்கு தேவையான அறிவுரைகளையும் சந்திரசேகர் வழங்கி வருகிறார். இந்த நிலையில் சந்திரசேகர் தன்னுடைய 52 வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். தனது திருமண நாளில் தனது மனைவியான ஷோபனாவுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்திருக்கிறார் சந்திரசேகர். இந்த செய்தி தான் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.