பில்டப் எல்லாம் வேஸ்ட்டா போச்சா!.. விஜய் மக்கள் இயக்கத்தை கலைச்சாச்சாமே!..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது போன்ற தோற்றத்தை பல வருடங்களாகவே அவரின் ரசிகர்கள் உருவாக்கி வருகின்றனர். ஆனால், அவர் அதுபற்றி எதுவும் பேசாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. கடந்த வருடம் திடீரென விஜயின் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் எஸ்.ஏ.சி. பதிவு செய்தார். எனவே, விஜய் அரசியல் கட்சி துவங்கியது போன்ற தோற்றம் ஏற்பட்டது.
ஆனால், இதற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரை பயன்படுத்தி கட்சி துவங்கினாலோ, கூட்டம் நடத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜய் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன்பின் அது அடங்கிப்போனது.
மேலும், தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விஜய் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது துவங்கியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என்றாலும் விஜயின் ரசிகர்களாக பின் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விஜயின் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயை முதல்வர் ரேஞ்சிக்கு சித்தரித்து அவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒடி வருகின்றனர். நடக்கவுள்ள் உள்ளாட்சி தேர்தலில் கூட அவரின் ரசிகர்கள் பலரும் போட்டியிடுகின்றனர். மேலும் 2021-ல் உள்ளாட்சி..2026-ல் மக்களாட்சி என ரைமிங்காக வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.