ஒரே படம்.. ஃபீல்ட் அவுட்!.. விஜயின் போட்டி நடிகர்களை காலி செய்த எஸ்.ஏ.சி.. அடப்பாவமே!...
பொதுவாக எல்லா துறைகளிலும் போட்டி பொறாமை இருக்கிறது. ஆனால், இது அதிகமாக இருக்கும் துறை எனில் அது திரைப்பட துறைதான். நடிகரோ, இயக்குனரோ, அல்லது தயாரிப்பாளரோ ஒருவரை அவ்வளவு சீக்கிரம் வளர விட மாட்டார்கள். பல தடைகள் வரும். பல பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். ஒருவரை பற்றி இல்லாதை சொல்லி அவரை காலி செய்வார்கள். அவர் வாய்ப்பை பெற பல சிக்கல்களை ஏற்படுத்துவார்கள்.
அதுவும் நடிகர்கள் இதை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். நமக்கு சினிமா வேண்டாம்டா சாமி என நினைக்க வைத்து ஓட விடுவார்கள். இதையெல்லாம் தாண்டி போராடினால்தான் சினிமாவில் நீடிக்க முடியும்.திரைத்துறையில் இப்போதும் இது இருக்கிறது. எப்போதும் இருக்கும்.
இங்கே நாம் பார்க்க போவது தனது மகன் விஜயின் பிரகாசமான திரை வாழ்க்கைக்காக அவரின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் என்னென்னவெல்லாம் செய்தார் என்பதைத்தார்ன்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்த விஜயை வேறுவழியில்லாமல் நடிகராக்கினார் எஸ்.ஏ.சி. தன் மகனை வைத்து யாரும் படம் எடுக்க வரமாட்டார்கள் என்பதால் அவரே சொந்த பணத்தை போட்டு படத்தை எடுத்தார். நாளைய தீர்ப்பு, ரசிகன், மாண்புமிகு மாணவன் என சில படங்களை எடுத்தார். ஆனால், தயாரிப்பாளர்களின் பார்வை விஜய் பக்கம் திரும்பவில்லை. அப்போதுதான் விக்ரமினின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம் விஜய்க்கு ரசிகர்களை பெற்று தந்தது. அந்த படத்தின் வெற்றியால்தான் மற்ற தயாரிப்பாளர்களும் விஜயை வைத்து படம் எடுக்க முன்வந்தனர்.
விஜயின் படங்கள் ஓட துவங்கியவுடன் அவருக்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது, சிறந்த இயக்குனர்களை தேர்ந்தெடுப்பது, நல்ல டெக்னீஷயன்களை போடுவது என அப்படி யோசிக்காமல் யாரெல்லாம் விஜய்க்கு போட்டி.. அவர்களை எப்படி காலி செய்வது என்றே அதிகம் யோசித்தாராம் எஸ்.ஏ.சி.
குறிப்பாக ஒரு படம் ஹிட் கொடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் நடிகர்களை அவர் டார்கெட் செய்துள்ளார். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து தனது இயக்கத்தில் ஒரு மொக்கை கதையில் நடிக்க வைத்து ஃபிளாப் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவாராம். படம் தோல்வியடைந்துவிட்டால் தயாரிப்பாளர்கள் அந்த நடிகர்களின் பின்னால் செல்ல மாட்டார்கள். அவர்களின் மார்க்கெட் காலியாகிவிடும். எனவே விஜய்க்கு போட்டியாக அவர்கள் வளரமாட்டார்கள் என்பதுதான் அவரின் கணக்கு. அதாவது முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவது.
7ஜி ரெயின்போ காலணி படத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவை உடனே அழைத்து சுக்ரன் எனும் மொக்கை படத்தில் நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. இரண்டாவது படமே ரவிக்கு தோல்விப்படமானது. இதில், விஜயை கெஸ்ட் ரோலிலும் நடிக்க வைத்திருப்பார் எஸ்.ஏ.சி. அதாவது மறைமுகமாக அப்படத்தை விஜயின் படமாக மாற்றிவிட்டார்.
அதேபோல், சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமாகிய நடிகர் நரேனை அழைத்து அவரின் அடுத்த படத்தை இயக்கினார் எஸ்.ஏ.சி. நெஞ்சிருக்கும் வரை என்கிற அந்த திரைப்படம் ஒரு தோல்விப்படமாகும். அதேபோல், அப்பாஸை முயற்சி செய்தார். ஆனால், அவ்ர் எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதேபோல், ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து எப்படியாவது ஒரு படத்தை இயக்க திட்டம் போட்ட எஸ்.ஏ.சி அவரை பல வழிகளில் தொடர்பு கொண்டாராம். ஆனால், ஸ்ரீகாந்தின் அப்பாவுக்கு நெருக்கமாக இருந்த சில சினிமா பத்திரிக்கையாளர்கள் எஸ்.ஏ.சியின் திட்டத்தை புரிந்து அதை நடக்கவிடாமல் தடுத்துவிட்டனராம். ஒரு கட்டத்தில் இது விஜய்க்கே பிடிக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை பல வருடங்களாக சினிமா துறையை கவனித்து வரும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு யுடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அனேகமாக அஜித்தையும் வைத்து படம் எடுக்க எஸ்.ஏ. சந்திரசேகர் முயற்சி செய்திருப்பார். ஆனால், அஜித் அதற்கு சம்மதத்திருக்க மாட்டார் என்றே கணிக்கப்படுகிறது.
இப்படியெல்லாம் செய்ததன் பயனாகத்தான் விஜய் தற்போது அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார். சொந்த மகனையே பார்க்க முடியாமல் தவிக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: நடிப்பை பார்த்து குபீர்ன்னு கேட்ட சிரிப்பலை… சினிமாவை பார்த்து பயந்து ஓடிய சூர்யா…