கே.ஜி.எப் 2வில் நிறைய தப்பிருக்கு.! ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய தளபதி விஜயின் தந்தை.!

by Manikandan |   ( Updated:2022-05-06 08:14:54  )
கே.ஜி.எப் 2வில் நிறைய தப்பிருக்கு.! ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய தளபதி விஜயின் தந்தை.!
X

தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட். அதற்கு அடுத்த நாள் தான் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படமாக கே.ஜி.எப் 2வெளியானது.

பீஸ்ட் ட்ரைலரை பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கு நிச்சயம் டஃப் கொடுக்கும் என ரசிகர்கள் நம்பினர். ஆனால் அந்த நிலைமை அப்படியே தலைகீழானது. அதன் பிறகு, கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

பீஸ்ட், கே.ஜி.எப் 2 பற்றி அண்மையில் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அண்மையில் கூறுகையில், கே.ஜி.எப் 2 மற்றும் பீஸ்ட் படங்களை பார்த்துவிட்ட்டீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர் தயங்காமல் பதிலளித்தார்.

இதையும் படியுங்களேன் - அஜித் அவமானபடுத்தப்பட்டாரா.?! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய முக்கிய சினிமா பிரபலம்.!

கே.ஜி.எப் 2 பார்த்தேன் ஆனால் அதில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தது. குறிப்பாக ஹீரோ நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் செல்கிறார். அப்போது, மந்திரிமார்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். PM முன்னிலையில் ஒரு மந்திரியை சுட்டு கொள்கிறார் ஹீரோ.

ஒரு நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும் என்றால் எத்தனை அடுக்கு பாதுகாப்புகளை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் கே.ஜி.எப் 2வில் அதனை காட்டவில்லை. இருந்தாலும், அதனை மறக்கடித்து, கைதட்ட வைத்தது கே.ஜி.எப் 2 . அதுதான் இயக்குனரின் மேஜிக். என்று தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Next Story