செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் அவருடைய 100வது படமாக அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது கேப்டன் பிரபாகரன், இதுவரை எந்த நடிகருக்கும் அவர்களுடைய 100 வது படம் வெற்றிப்படமாக அமைந்ததே இல்லை. இதுதான் விஜயகாந்தின் தனிச்சிறப்பு. இப்போது பல படங்கள் ரி ரிலீஸ் என்ற பெயரில் மறுபடியும் ரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இப்போது கேப்டன் பிரபாகரன் படத்தையும் ரி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஆகஸ்ட் 22 ஆம் தேதி அந்தப் படம் ரி ரிலீஸ் ஆக இருக்கின்றது.
அதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ஆர்.வி.உதயகுமார், செல்வமணி, ஏ.ஆர். முருகதாஸ், மன்சூர் அலிகான், எஸ். ஏ. சந்திரசேகர் என விஜயகாந்துடன் மிக நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எஸ்.ஏ.சி மேடையில் பேசும் போது செந்தூரப்பாண்டி படப்பிடிப்பில் நடந்த சில சம்பவங்களை கூறினார். நாளைய தீர்ப்பு படம் எடுத்து மிகவும் நஷ்டத்தில் இருந்திருக்கிறார் எஸ்.ஏ.சி. ஆனால் விஜய் அப்போது ஹீரோவாகிவிட்டார்.
இருந்தாலும் விஜயை அனைவரும் கொண்டாட வேண்டும். செந்தூரப்பாண்டி படத்தில் நடிக்க பல முன்னணி ஹீரோக்களிடம் போய் கேட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. யாரும் சம்மதிக்கவில்லை. ஷோபா ‘ஏங்க நீங்க விஜயகாந்திடம் கேட்கல’ என்ற ஒரு கேள்வியை எஸ்.ஏ.சியிடம் கேட்க ‘அவரு பண்ணிடுவாரு. இருந்தாலும் கேட்க ஒரு மாதிரியாக இருக்கு’ என எஸ்.ஏ.சி சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் விஜயகாந்த் அந்த நேரம் மிகவும் பீக்கில் இருக்கிறார். இருந்தாலும் விஜயகாந்துக்கு போன் செய்து ‘எங்க இருக்க விஜி. எனக்கு ஒரு உதவி. நானே வர்றேன்’னு சொல்லிட்டு குளிக்க போனாராம் எஸ்.ஏ.சி.
குளித்துவிட்டு வெளியே வரும் போது எஸ்.ஏ.சியின் பெட்ரூமில் அமர்ந்திருக்கிறார் விஜயகாந்த். ஏனெனில் உதவினு கேட்டு நீங்க என் வீட்டுக்கு வரக்கூடாது சார்னு நானே வந்துட்டேனு விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அடுத்த நாள் ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு விஜயகாந்துக்கு அட்வான்ஸாக கொடுக்க எஸ்.ஏ.சி செல்ல பணம் வாங்க மாட்டேன் சார்.இது உதவி. அதனால் பணம் வேண்டாம் என சொல்லி விஜயகாந்த் வாங்க மறுத்துவிட்டாராம்.
இப்படி செந்தூரப்பாண்டி படம் ஆரம்பித்து ரிலீஸ் ஆகி எஸ்.ஏ.சிக்கு பெரிய லாபமும் கிடைத்திருக்கிறது. சரி. லாபம் பார்த்துட்டோம். விஜயகாந்துக்கு ஏதாவது கொடுக்கணுமேனு மறுபடியும் விஜயகாந்திடம் ‘விஜி உனக்கு என்ன வேண்டும். எதாவது செய்யணும்’னு எஸ்.ஏ.சி சொல்லியிருக்கிறார். ஆனால் விஜயகாந்த் வேண்டாம் வாங்க மாட்டேனு சொல்லிட்டாராம். அப்போதுதான் எஸ்.ஏ.சிக்கு ஒரு யோசனை வந்ததாம். விஜயகாந்த் வீட்டுக்கு அருகில் எஸ்.ஏ.சிக்கு சொந்தமான லேண்ட் இருந்ததாம். அதை விஜயகாந்த் தரப்பில் எஸ்.ஏ.சியிடம் பல பேர் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டே இருந்தார்களாம். ஆனால் அப்போது எஸ்.ஏ.சி கொடுக்க மறுத்தாராம்.
இதுதான் டைம் என நினைத்து பத்திர பதிவு அலுவலகத்துக்கு சென்று அந்த லேண்டை விஜயகாந்த் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து அந்த பத்திரத்தை எடுத்து விஜயகாந்த் வீட்டிலும் கொடுத்து விட்டாராம் எஸ்.ஏ.சி. அந்த காலத்தில் யார் நிலத்தை விற்கிறார்களோ அவர்கள் பத்திர அலுவலகத்திற்கு போனால் போதுமாம். இந்த விஷயம் அறிந்து விஜயகாந்த் நேராக எஸ்.ஏ.சி வீட்டிற்கு வந்து ஷோபாவிடம் ‘ஏன்ம்மா சார் இப்படி பண்ணாங்க? என்னை கேவலப்படுத்திட்டாரும்மா. நான் உதவிதான் செய்தேன். பணம் வேண்டாம் என்றுதானே சொன்னேன்’ என சொல்லியிருக்கிறார்.
உடனே எஸ்.ஏ.சி ‘ நான் பணமா கொடுத்தேனா? இல்லையே’ என சொல்லி விஜயகாந்தை அமைதிப்படுத்தினாராம் எஸ்.ஏ.சி. இப்படி ஒரு மனிதத்தை நான் எங்கேயும் பார்த்தது இல்லை என்றும் எஸ்.ஏ.சி விஜயகாந்தை பற்றி எமோஷனலாக பேசினார்.
