விஜயை எஸ்.ஏ.சி அடித்த போது நான் தடுத்தேன்!..ஆனா எனக்காக விஜய் வரல!.. புலம்பும் நடிகர்….

Published on: April 11, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இப்போது கோலிவுட்டே கொண்டாடும் ஒரு மாபெரும் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். விஜயின் படங்கள் வெளியானாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழாக் காலம் தான்.

அந்த அளவுக்கு விஜயை தன் தலைவனாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இப்படி விஜய் இந்த நிலையை அடைந்ததற்கு முக்கிய காரணமாகவே இருந்தவர்களில் அவரின் தந்தையான எஸ்.ஏ.சியும் ஒருவர்.

விஜயை சிறு வயதில் இருந்தே சினிமாவிற்காக கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வந்தவர் தான் எஸ்.ஏ.சி. ஆரம்பகாலங்களில் இருவரும் பாசமாகவும் நெருக்கமாகவும் தான் இருந்தார்கள்.

அதன் பின் விஜய் ஓரளவுக்கு மார்கெட்டை பிடித்த பிறகு ஏதோ ஒரு சில காரணங்களால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பேட்டி அளித்து வரும் நடிகர் பொன்னம்பலம் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் உள்ள உறவை பற்றி கூறினார்.

அதாவது விஜயுடன் ஆரம்பகால படங்களில் இருந்தே பொன்னம்பலம் படங்களில் பணியாற்றியிருக்கிறார். எஸ்.ஏ.சி இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜய் நடிக்கும் போது சின்ன சின்ன தவறுகள் செய்வாராம். அது பிடிக்காமல் படப்பிடிப்பிலேயே விஜயை எஸ்.ஏ.சி கன்னத்திலேயே அடித்திருக்கிறாராம்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பொன்னம்பலம் ஓடிப்போய் எஸ்.ஏ.சியிடம் ‘என்ன சார்,
பொது இடத்தில் இப்படி அடிக்கலாமா? அதுவும் இப்பொழுது விஜய் உங்கள் மகன் இல்ல, இந்தப் படத்தின் ஹீரோ’ என்று விஜய்க்காக வக்காலத்து வாங்கினாராம்.

இதையும் படிங்க : கோலிவுட்டை அலங்கரிக்கும் சின்னத்திரை நடிகைகள்!.. வாய்ப்பை இழக்கும் முன்னனி நடிகைகள்!..

இப்படி விஜய்க்காக குரல் கொடுத்த எனக்கு இப்பொழுது என் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது ஒரு தடவையாவது விஜய் நலம் விசாரித்திருக்கலாம், ஆனால் இதுவரை ஒன்றும் கேட்கவில்லை என்று தன் வேதனையை பகிர்ந்தார் பொன்னம்பலம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.