80களில் சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, இது எங்கள் நீதி என புரட்சிகரமான படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரின் மகன் விஜய்க்கு நடிக்கும் ஆசை வர, மகனை ஹீரோவாக்க படாத பாடுபட்டார்.
விஜயை வைத்து படம் எடுக்க யாரும் முன் வாரத நிலையில் சொந்த காசை செலவழித்து மாண்புமிகு மாணவன், ரசிகன், தேவா, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இதற்காக சில சொத்துக்களையும் அவர் விற்க வேண்டியிருந்தது. மேலும், மற்ற தயாரிப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு என் மகனை வைத்து படம் எடுங்கள் என கெஞ்சினார் எஸ்.ஏ.சி.
ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து விஜய் வளர துவங்கினார். விஜய் நடிக்கும் படங்களின் கதையை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் கேட்பார். அவருக்கு பிடித்தால் மட்டுமே விஜய் கதை கேட்பார்.
தனக்கென ஒரு மார்க்கெட் உருவாகியதும் அப்பா படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதாவது, அப்பாவுக்கே அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. விஜய் நடிக்கும் படங்கள் வசூலை வாரிக்குவிக்க அவரின் சம்பளமும் பல கோடிகளாக அதிகரித்து தற்போது ரூ.80 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் மாறியுள்ளார்.
ஒருபக்கம் ,விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக அவருக்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. தன்னை கேட்காமல் தன்னை அரசியலில் தொடர்புபடுத்தும் வேலைகளை எஸ்.ஏ.சி செய்வது விஜய்க்கு பிடிக்கவில்லை. இது தொடர்பான பஞ்சாயத்துகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் ‘நான் கதை கேட்டு விஜய் நடித்த கடைசி திரைப்படம் துப்பாக்கி. அப்படத்திற்கு பின் விஜய் நடித்த படங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், துப்பாக்கி போல் திரைக்கதை உள்ள திரைப்படம் அதன்பின் விஜய்க்கு அமையவில்லை’ எனக்கூறியுள்ளார்.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…