என்னால் வந்தவர்கள் ஒன்னு விஜய் இன்னொருவர்?.. இருமாப்பில் மாறுதட்டிக் கொள்ளும் எஸ்.ஏ.சி!.
தமிழ் சினிமாவில் விஜய்க்கும் அவரது அப்பாவான எஸ்.ஏ.சிக்கும் என்னதான் பிரச்சினை என்றாலும் சினிமா பிரபலங்கள் மத்தியில் எஸ்.ஏ.சி க்கு என்று எப்பொழுதும் ஒரு தனி மரியாதையே இருக்கின்றது. ஏனெனில் அவர் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
புரட்சி இயக்குனர் என்றே சொல்லலாம். அவர் எடுக்கும் பெரும்பாலான படங்கள் பெரும்பாலும் சட்டம் சார்ந்தவையாகவும் புரட்சிக் கருத்துக்களை அடிப்படையாகவும் அமைந்திருக்கும். மேலும் அதற்கேற்றாற்போல் விஜயகாந்தை வைத்து தான் அதிகமான படங்களை எடுத்திருப்பதால் விஜயகாந்த் மூலமாக அந்தக் கருத்துக்கள் மக்களை எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகின்றது.
இதையும் படிங்க :மறக்க முடியுமா?.. விஜய் நடிக்க மறுத்த சில்வர் ஜூப்ளி படங்கள்.. இப்படியெல்லாமா காரணம் சொல்லுவாரு?..
மேலும் நடிகர் விஜய் இந்த அளவுக்கு ஒரு பவர் ஃபுல் நடிகராக வளர்ந்து நிற்கிறார் என்றால் அவரை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிற்கு ஏற்ற மாதிரி வடிவமைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி என்று தான் சொல்ல வேண்டும். இதை ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். ஒரு சாதாரண ஹீரோவாக இருந்த விஜயை ஆக்ஷன் ஹீரோவாக , கமெர்ஷியல் ஹீரோவாக , ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றிய பெருமை கண்டிப்பாக எஸ்.ஏ.சிக்கும் இருக்கின்றது.
அவர் ஒரு இடத்தை பிடித்த பிறகு தனியாக சொந்த முயற்சியில் இறங்கினாலும் அந்த இடத்தை பிடிப்பதற்கு எஸ்.ஏ.சிவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். மேலும் விஜய் மாதிரியே இன்னொருவரை பற்றி பெருமைப்பட்டுக் கொண்ட எஸ்.ஏ.சி அவரைப் பற்றியும் பெருமிதமாக கூறினார். எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் இன்று தமிழ் சினிமாவே பெருமையாக கருதும் அளவுக்கு இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.
அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இயக்குனர் சங்கர், இயக்குனர் பவித்ரன், இயக்குனர் பொன்ராம். இதில் இயக்குனர் சங்கர் எஸ்.ஏ.சியிடம் 17 படங்களில் கூடவே இருந்து உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம். இதைப் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி இதுவரை யாரும் என்னிடம் இப்படி இருந்ததில்லை எனவும்,
இரண்டு, மூன்று படங்களில் வெளியே போய்விடுவார்கள் என்றும் சங்கர் மட்டும் தான் 17 படங்களில் கூடவே இருந்தார் என்றும் கூறினார். மேலும் உதவி இயக்குனராக சங்கர் இருந்த போது அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் இருந்து கற்றுக் கொண்டு போகிறேன் என்று கூடவே இருந்தார் என்று எஸ்.ஏ.சி கூறினார். இதன் மூலம் நான் பார்த்து வியந்ததில் இரண்டு பேர், ஒன்று விஜய் மற்றொருவர் சங்கர் என்று எஸ்.ஏ.சி அந்தப் பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க :வாரிசு படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் முழுக்க முழுக்க பொய்… விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…