சச்சின் படத்தில் இத்தனை சொதப்பல்கள்... பட வசூலில் தயாரிப்பாளர் செய்த தகிடுதத்தம்...

by Akhilan |
சச்சின் படத்தில் இத்தனை சொதப்பல்கள்... பட வசூலில் தயாரிப்பாளர் செய்த தகிடுதத்தம்...
X

விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படம் நூறு நாட்கள் திரையரங்குகளில் ஓடப்பட்டது. ஆனால் அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் வெகுவாக போராடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழ் சினிமாவின் தொடர் விடுமுறைகள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு தான் கொண்டாட்டம். பலரும் தங்கள் படங்களை அந்த விடுமுறையில் வெளியிடுவர். அப்போது தானே வசூலை அள்ள முடியும். அப்படியும், சில பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் போது சிலர் தங்கள் பட வெளியீட்டை தள்ளி போடவே விரும்புவர். முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் என்றாலும் இதன் பொருட்டே சிறு பட்ஜெட் திரைப்படங்கள் வெளியீடு இருக்காது.

மிகப்பிரம்மாண்ட படைப்பு வரும் போதும் இந்த பிரச்சனை இருக்கும். இந்நிலையில், தமிழ் சினிமாவின் மிகப் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் ரிலீஸ் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக பலரும் தங்கள் படங்களை வெளியிடவில்லை. ஆனால், தனுஷ் நடிப்பில் உருவான நானே வருவேன் படமும் தற்போது ரிலீஸாகி இருக்கிறது. இது பலருக்கும் முக சுழிப்பையே கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஹலோ செல்வா!…‘நானே வருவேன்’ அந்த படத்தோட கதையா?!…இது தாணுவுக்கு தெரியுமா?…

இப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் இதுகுறித்து கேட்டப்போது கண்டிப்பாக நானே வருவேன் வெளிவரும் எனக் கூறி வெளியிட்டும் விட்டார். இது அவருக்கு முதல்முறை இல்லை. முன்னரே இதை செய்து சில பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறார்.

சச்சின்

விஜய் நடிப்பில் சச்சின் படத்தினையும் தாணு தான் தயாரித்து இருந்தார். அப்படம், ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்திற்கு எதிராக வெளியாகியது. வாசு இயக்கத்தில் வெளியான இப்படம் மலையாள ரீமேக் என்றாலும் ஜோதிகாவின் நடிப்பால் பெரிய வரவேற்பை கொடுத்தது. இது சச்சின் படத்திற்கு பெரிய பிரச்சனையை கொடுத்தது. படத்திற்கு பெரிதாக காட்சிகள் கிடைக்கவில்லை. பெரிய வரவேற்பும் அமையவில்லை. தாணு தன் படத்தினை 100 நாட்கள் ஓட வைக்க வேண்டும் என முடிவு எடுத்திருந்தாராம்.

அதனால், 50 நாட்களை தாண்டி ஒன்று இல்லை மூன்று தியேட்டர்களை மட்டுமே ஓடியது. செய்தித்தாள்களிலும் தினமும் இன்று இத்தனையாவது நாள் என தொடர் விளம்பரமும் செய்தே படத்தினை ஓட்டினார். என்னத்தான் 100 நாட்கள் ஓடினாலும் படத்திற்கு பெரிய வரவேற்பெல்லாம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story