விஜய் இறங்குனாலே அது ஹிட்டுதான்!.. ஃபிரி புக்கிங்கில் வசூலை குவிக்கும் சச்சின்!…

by சிவா |   ( Updated:2025-04-18 05:34:15  )
sachin
X

கலைப்புலி எஸ்.தாணு இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்து 2005ம் வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம்தான் சச்சின். காதல் கதைகளில் நடிப்பதை நிறுத்திவிட்டு விஜய் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக மாறியிருந்த நேரத்தில் ஃபிரெஸ்ஸாக நடித்த காதல் கதைதான் சச்சின்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒரு அழகான காதல் கதையாகவே இப்படம் உருவாகியிருந்தது. அதோடு, படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதேபோல் விஜய் - வடிவேலு இடையேயான காமெடி காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

இந்த படம் வெளியானபோது ரஜினியின் சந்திரமுகி படமும் வெளியானது. பாபா படம் சரியாக ஓடாத நிலையில் சில வருடங்கள் இடைவெளி விட்டு ரஜினி சொல்லி அடித்த படம் இது. பி.வாசு இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்திற்கு போட்டியாக வந்த விஜயின் சச்சின் படம் சுமாரான வெற்றியை பெற்றது.

சமீபகாலமாகவே விஜயின் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. தரணி இயக்கத்தில் விஜய் நடித்து அப்போதே ஹிட் அடித்த கில்லி படம் போன வருடம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வசூலை அள்ளியது. எனவே, பல தயாரிப்பாளர்களுக்கும் இந்த ஆசை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் விஜயின் சச்சின் படம் ஏப்ரல் 18ம் தேதியான இன்று தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களிலும் மீண்டும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படம் ஃப்ரி புக்கிங்கில் 1.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை பார்க்கும்போது எப்படியும் இப்படம் 10 கோடி வரை வசூல் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே மாதம் முடிவடையவுள்ளது. அதன்பின் விஜய் அரசியலில் தீவிரமாக களமிறங்குவார் என கணிக்கப்படுகிறது.

Next Story