சச்சின் ரீ ரிலீஸ்.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.. ஆனால் வருத்தப்பட்டு பேசிய இயக்குனர்

by Rohini |   ( Updated:2025-04-26 04:37:46  )
sachin_new
X

sachin_new

Sachin: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் சச்சின். இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். குறிப்பிட்ட படங்களில் மட்டுமே ஜெனிலியா நடித்திருந்தாலும் அவருக்கு என தமிழ்நாட்டில் தனி பேன்ஸ் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

அவருடைய குறும்புத்தனமான நடிப்பு இன்றுவரை ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நடிகையாக ஜெனிலியா இருந்து வருகிறார். படம் ரிலீஸ் ஆகி வசூலிலும் சாதனை படைத்திருப்பதாக கலைப்புலி எஸ் தானு கூறி இருக்கிறார் .அந்த படத்தின் ரீ ரிலீஸ் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு பல விஷயங்களை பகிர்ந்து இருந்தது. குறிப்பாக படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன் படத்தை பற்றி பெரிய அளவில் சிலாகித்து பேசி இருந்தார்.

ஆரம்பத்தில் தானு இந்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறார் என்று சொன்னதும் ஒரு ஸ்கிரீனில் தான் ரிலீஸ் செய்யப் போகிறார் என நினைத்தாராம். அதன் பிறகு பார்த்தால் கேரளா கர்நாடகா அதன் பிறகு ஓவர் சீஸ் என உலக அளவில் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது .அது மட்டுமல்ல டிரைலரை பார்த்ததுமே நான் மிரண்டு போய்விட்டேன்.

அதிலும் இப்போது ட்ரெண்டிங் ஆகும் கிப்ளி ஆர்ட்டில் ஒரு பாடலை எடிட் செய்திருந்தார்கள். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆடியன்ஸை எப்படியாவது தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியில் தாணு சார் பல வகைகளில் இந்த படத்திற்காக முயற்சி செய்திருக்கிறார். அது இப்போது ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது.

அதன் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இசை படத்தை வேறு எங்கேயோ கொண்டு போய்விட்டது. ஒவ்வொரு பாடலிலும் ரசிகர்களை திரையரங்கிற்குள் ஆட வைத்திருக்கிறார். அதன் பிறகு டான்ஸ் மாஸ்டர் சோபி. அவருடைய கொரியோகிராப் படத்திற்கு பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறது. கடைசியாக விஜய். என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடிக்க அவர் ஓகே சொன்னதே பெரிய விஷயம்.

மிகவும் கீழ் இறங்கி இந்த படத்தில் நடித்திருப்பார். ஆனால் மீண்டும் இந்த மாதிரி சப்பியாக பப்லியாக அவரை எப்போது பார்க்கப் போகிறோம் அது இனிமேல் முடியாது என்று நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் அவர் அவருடைய தனி வழியை அமைத்துக் கொண்டு போகிறார். அது நல்லதாகவே அமையட்டும் என ஜான் மகேந்திரன் அந்த விழா மேடையில் கூறியிருக்கிறார்.

Next Story