சச்சின் ரீ ரிலீஸுக்கு பின்னணியில் இப்படி ஒரு அரசியலா? தாணு இப்படி பண்ணுவாருனு நினைக்கல

by Rohini |   ( Updated:2025-04-19 04:39:14  )
sachin
X

sachin

Sachin: படங்களே எதுவும் இல்லை. எல்லா படங்களும் ப்ளாப். தியேட்டரில் ரிலீஸே இல்லை. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் ஏற்கனவே ரிலீஸ் ஆகி ஹிட்டான திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வார்கள். ஆனால் ஒரு படம் நீண்ட காலத்திற்குப் பிறகு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் படத்தின் கலெக்ஷனை கெடுக்கிற மாதிரி சச்சின் படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே அஜித் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் படத்தில் நடித்து வருகிறார் .அப்படி இருக்கும் பொழுது ஒரு மெகா ஸ்டார் படத்தின் கலெக்ஷனை கெடுக்கும் வகையில் இன்னொரு மெகா ஸ்டாரின் படத்தைக் கொண்டு வருவது என்பது எந்த விதத்தில் நியாயம்.

குட் பேட் அக்லி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் வெளியான எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல். இந்த நேரத்தில் எதற்காக கலைபுலி எஸ் தானு விஜய் நடித்த சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்தார். இதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. அதுவும் சச்சின் திரைப்படம் பிளாப்பான திரைப்படம். இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு பிளாப்பான படத்தை கொண்டு வந்து ரீ ரிலீஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன ? திரை மறைவில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் அதிர்ச்சியான தகவல் இருக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் சேகுவாரா கூறியிருக்கிறார் .

அப்படி என்ன அதிர்ச்சியான தகவல் இன்று அவரிடமே கேட்டபோது அதற்கும் பதில் அளித்து இருக்கிறார் சேகுவாரா .அதாவது ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ,காக்கா கழுகு கதை இதெல்லாம் நாம் பார்த்தோம். சூப்பர் ஸ்டார் என்ற அந்த இடத்தை தக்க வைப்பதற்காக ,கலெக்ஷனை காட்ட வேண்டும் .தொடர்ந்து லியோ படத்திற்கு பிறகு கோட் திரைப்படமும் சரியா போகவில்லை என்ற ஒரு சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் ஒரு படம் பெரிய அளவில் கலெக்ஷனை தந்து கொண்டிருக்கிறது. எல்லா படத்தையும் பீட் பண்ணுகிற மாதிரி அஜித்தின் படம் மாறி இருக்கிறது .

தன்னுடைய படம் மட்டுமே பெரிய வசூலை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் விஜய் அதன் மூலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் விஜய் குட் பேட் அக்லி படத்தின் வரலாற்று சாதனையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற ஒரு யுத்தியில் தான் கலைப்புலி தாணுவுடன் இணைந்து சச்சின் திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். எந்த ஒரு போட்டியும் இல்லாமல் குட் பேட் அக்லி திரைப்படம் கலெக்ஷனில் பெரிய சாதனையை படைத்து கொண்டிருக்கின்றது. விஜயோட கலெக்ஷனையே முறியடிக்கும் வகையில் குட் பேட் அக்லி படம் மாறி வருவதால் இந்த சூழ்நிலையில் சச்சின் திரைப்படத்தை ரிலீஸ் செய்தார்கள் என்பதுதான் தகவல்.

சரி ப்ளாப்பான படத்தை எதுக்கு இவர்கள் ரிலீஸ் செய்கிறார்கள் என்று கேட்டோம் என்றால் இப்போதைக்கு இந்த சச்சின் படத்தை தான் ரீ ரிலீஸ் செய்ய முடியும் .அதற்கு முக்கிய காரணம் கலைப்புலி தாணுவிற்கும் விஜய்க்கும் ஒரு நல்ல புரிதல் இருப்பதாக தெரிகிறது. அதையும் மீறி சச்சின் படத்தை எப்படி ஓட வைக்க முடியும் என்று பார்த்தால் விஜயின் மன்ற நிர்வாகிகள் ரசிகர்களாகத்தான் இருக்கிறார்கள் .அவர்களை வைத்து சச்சின் படம் ரிலீஸ் ஆகிற திரையரங்குகளில் ஒவ்வொருவரும் 200 டிக்கெட்களை வாங்க வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் ஓடுகிற தியேட்டரை பார்க்கும்பொழுது 30 பேர் தான் உட்கார்ந்து இருப்பார்கள் .ஆனால் டிக்கெட் ஹவுஸ் ஃபுல். அதற்கு காரணம் விஜய்யின் மன்ற நிர்வாகிகள் தான். இது ஜன நாயகன் படத்திற்காக நடந்த ஒத்திகைதான் என சேகுவாரா கூறியிருக்கிறார்.

Next Story