
Cinema News
சச்சின் மகள் நடிக்க வராங்களா.?! ஏன் அந்த வேலைக்கு போக மாட்டீங்களா.?!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் என பார்க்க படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகள் இல்லை என சொல்லும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை செய்து மாஸ்டர் பிளாஸ்டர் என வர்ணிக்கப்படும் அளவுக்கு பிரமாண்ட புகழுக்கு சொந்தகாரர்.
இவர் அஞ்சலி எனும் மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் இருக்கின்றனர். இவருடைய மகனை தன்னை போல கிரிக்கெட் வீரனாக மாற்ற வேண்டும் என கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார். மும்பை அணியிலும் இவர் ஒரு நெட் பயிற்சி வீரராக இருகிறார்.
மகள் சாரா , மருத்துவம் படித்து முடித்துள்ளார். மேலும் இவருக்கு மாடலிங் துறையில் பெரும் ஆர்வம் உள்ளதாம். இதனால் இவர் சினிமா துறைக்கு வர உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் ஹீரோ ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இதையும் படியுங்களேன் – இப்படி ஒரு புத்தியா.?! விஜய்யின் மெகா ஹிட் இயக்குனருக்கு வேறு மாதிரியான சிக்கல்.!?
ஆனால், இந்த தகவலை சச்சின் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளதாம். ஆம், சாரா டெண்டுல்கர் மருத்துவ துறையில் செல்ல உள்ளார் என்ற தகவல் தான் வெளியாகி உள்ளது. எப்படியோ படித்த டாக்டர் வேளைக்கு போக போகிறார் என்ற தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது. யாருக்கு தெரியும் விரைவில் பட அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை.