எனக்காக இதை நீங்கள் செய்வீங்களா?!. எம்.ஜி.ஆரிடம் மனைவி சதானந்தவதி வாங்கிய சத்தியம்!..

by சிவா |   ( Updated:2023-07-28 01:26:38  )
mgr
X

நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவிலும் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து ஹீரோ ஆனவர் எம்.ஜி.ஆர். 40 வருடங்களுக்கும் மேல் எம்.ஜி.ஆர் சினிமாவில் சாதிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் மாஸ் ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்தும், தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

பெரும்பாலும் தவறை தட்டி கேட்பவராகவும், ஏழைகளுக்கு உதவும் குணம் உள்ளவராகவும் திரைப்படங்களில் நடித்தார். அதனாலேயே இவரை தமிழக மக்கள் முதல்வராக கோட்டையில் அமர வைத்தனர். எம்.ஜி.ஆரை வள்ளல் என மக்கள் சொல்வார்கள். ஏனெனில், கஷ்டம் என தன்னை தேடி வந்து உதவி கேட்கும் எல்லோருக்கும் அவர் வாரி கொடுத்தார்.

mgr

திருமண வாழ்க்கையை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் 3 திருமணங்கள் செய்து கொண்டார். முதலில் 1939ம் வருடம் எம்.ஜி.ஆர் தங்கமணி என்கிற பெண்ணை மணந்து கொண்டார். ஆனால், அவர் 1942 வருடம் இறந்துவிட்டார். அதன்பின் சதானந்தவதி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சதானந்தவதி காசநோயால் பாதிக்கப்பட்டார். இப்போது போல் அப்போது மருத்துவ வசதிகள் இல்லை. ஆனாலும், தனது மனைவி மீது அன்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தார். எப்படியாவது தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அவர் இருந்தார்.

இதையும் படிங்க: உனக்கு எதுக்கு இந்த வேலை!.. வேற எதாவது ட்ரை பண்ணு!.. கருணாநிதி மகனை எச்சரித்த எம்.ஜி.ஆர்!..

எம்.ஜி.ஆர் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஜானகி பெரிய நடிகையாக இருந்தார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை சதானந்தவதியிடம் எம்.ஜி.ஆர் மறைக்கவில்லை. சதானந்தவதிக்கும் இதில் மகிழ்ச்சியே. ‘நீங்கள் ஜானகியை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவே என் ஆசை. உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. நீங்கள் என் மீது காட்டும் அன்பு ஈடு இணை இல்லாதது. என் உடல் நிலை சரியில்லாததால் உங்களுக்கான கடமையை என்னால் செய்ய முடியவில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை’ என சொல்லி எம்.ஜி.ஆரின் கரங்களை தனது கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

mgr

ஜானகியை அருகில் அழைத்து ‘சகோதரியே.. என் கணவரின் மகிழ்ச்சியே என் பாக்கியம். இனிமேல் அவர் நம் இருவருக்கும் கணவர். நீயும் அவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்’ என சொன்னார். ‘ஒரு விஷயம்’ என அவர் நிறுத்த எம்.ஜி.ஆர் ‘சொல் சதானந்தவதி.. உனக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது. அதுதான் என் விருப்பம். உனக்கு இன்னும் நல்ல சிகிச்சை செய்து காசநோயை குணப்படுத்தணும்’ என்றாராம். அதற்கு சதானந்தவதி ‘மாமா. இந்த நோய்க்கு இங்கே மருது கிடையாது. நீங்கள் எனக்கு கொடுக்கும் சிகிச்சையே போதும். எனக்காக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வீர்கள். அது எனக்கு தெரியும். நீங்கள் எனக்கு கணவராக வந்தது என் பாக்கியம். ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல. நீங்களும், ஜானகியும் வேறு வீட்டில் வசிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்’ என சொன்னார்.

mgr

இதைக்கேட்ட எம்.ஜி.ஆர் கண்கலங்கிவிட்டாராம். அந்த கண்ணீரை துடைத்துவிட்ட சதானந்தவதி ‘அழாதீங்க.. இனிமேல் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். அதுவே என் மகிழ்ச்சியும் பிரார்த்தனையும்’ என்றார். எம்.ஜி.ஆர் ‘சதானந்தவதி நீ சாதரண பெண் இல்லை. குணக்குன்று. கணவனின் மகிழ்ச்சியையே உன் லட்சியமாக கொண்டிருக்கிறாய். உன் போன்ற பெண்கள் சமூகத்தின் கலங்கரை விளக்கம்’ என்றாராம்.

அதன்பின் ஜானகியை எம்.ஜி.ஆர் மணந்துகொண்டு வேறு வீட்டில் குடியேறினார். சினிமாவில் மெல்ல மெல்ல அவர் பட வாய்புகள் வந்தபின் அடையாறு பகுதியில் ஜானகியுடன் குடியேறினார். அதேநேரம் சதானந்தவதிக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையை எம்.ஜி.ஆர் கொடுத்தார். அதேபோல், அடிக்கடி ஜானகியும், எம்.ஜி.ஆரும் தொடர்ந்து அவரை அக்கறையுடன் பார்த்துக்கொண்டனர். 1962ம் வருடம் சதானந்தவதி மரணமடைந்தார்.

இதையும் படிங்க: உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…

Next Story