Connect with us

பவள மல்லி: கயாடு லோஹருடன் கைகோர்க்கும் சாய் அபயங்கர்

sai-gayadu lohar

latest news

பவள மல்லி: கயாடு லோஹருடன் கைகோர்க்கும் சாய் அபயங்கர்

கட்சி சேர’, ஆசை கூட’ போன்ற வைரல் ஹிட் பாடல்களைத் தொடர்ந்து, சாய் அபயங்கரின் அடுத்த இசை ஆல்பம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் வேகமாக வலந்து வரும் இசையமைப்பாளர்களில் சாய் அபயஙகரும் ஒருவர். கட்சி சேர’, ஆசை கூட’ என்ற இசை ஆல்பங்கள் சூப்பர் ஹிட் ஆனதை தொடந்து திரையுலகில் அறிமுகம் ஆனார். முதல் படமான ட்யூட் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சூர்யாவின் கருப்பு, தனுஷுடன் ஒரு படம் , அட்லியின் இயக்கத்தில் ஒரு படம், STR 49, கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ என முன்னணி நடிகளின் படங்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் சாய் அபயங்கர் அடுத்து பவளமல்லி என்ற பெயரில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளார். இதில் முதன்முறையாக ஸ்ருதிஹாசனும் இணைகிறர். இந்த பாடல் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. இந்த பாடலில் சாய் அபயங்கருடன் காயடு லோஹர் இணைந்து நடிக்கிறார்.

திங்க் மியூசிக் (Think Music India) நிறுவனம் இந்தப் பாடலை வெளியிடுகிறது. ‘விவேக்’ இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

பிற படங்கள்: கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ மற்றும் சிலம்பரசனின் ” ஆகிய படங்களிலும் இவர் பணியாற்றி வருகிறார்.

சாய் அபயங்கர் தனது 20 வயதிலேயே அனிருத் போன்ற ஒரு மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் இசையில் ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...
To Top